பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் கால்வாய் துார் வாருவது உத்திரமேரூரில் பாதியில் நிறுத்தம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
உத்திரமேரூர்; உத்திரமேரூரில், கால்வாய் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்தால், மழைநீர் குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.வடகிழக்கு பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளுக்கு செல்லும் மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க, காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டு

உத்திரமேரூர்; உத்திரமேரூரில், கால்வாய் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்தால், மழைநீர் குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.வடகிழக்கு பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளுக்கு செல்லும் மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க, காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டு இருந்தார்.கலெக்டரின் உத்தரவையடுத்து, உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் குளத்திற்கு, மழைநீர் செல்லும் ஏரி கால்வாயில் மண்டி கிடந்த புதர்கள் அகற்றப்பட்டு, கால்வாய் சீரமைக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கால்வாய் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்தால், கால்வாயில் செல்ல வேண்டிய மழைநீர், குடியிருப்பு பகுதியை சூழும் நிலை உள்ளது.எனவே, கால்வாயை முழுமையாக சீரமைக்க, உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X