விவசாய பணி துவங்கும் முன் ஏரி நீர் வீணாக செல்லும் அவலம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம்; விவசாய பணி துவங்கும் முன், காவாந்தண்டலம் ஏரி தண்ணீர், வீணாக செல்வதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த, காவாந்தண்டலத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. ஏரி நீரரை, 800 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.கடந்த ஆண்டு ஏரிக்கரை மற்றும் மதகு சீரமைக்கப்பட்டது. ஆனால், முறையாக பழுது பார்க்காமல், கண் துடைப்புக்காக சீரமைத்து உள்ளதால்,

காஞ்சிபுரம்; விவசாய பணி துவங்கும் முன், காவாந்தண்டலம் ஏரி தண்ணீர், வீணாக செல்வதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த, காவாந்தண்டலத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. ஏரி நீரரை, 800 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.கடந்த ஆண்டு ஏரிக்கரை மற்றும் மதகு சீரமைக்கப்பட்டது. ஆனால், முறையாக பழுது பார்க்காமல், கண் துடைப்புக்காக சீரமைத்து உள்ளதால், மதகு வழியாக தண்ணீர் வீணாக செல்வதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், ஏரியில் ஓரளவு தண்ணீர் இருக்கிறது. ஆனால், மதகு முறையாக சீரமைக்காததால், தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.ஆண்டுதோறும், பருவ மழையை ஒட்டி, கார்த்திகை மாதத்தில், இந்த பகுதி விவசாயிகள், விவசாய வேலையை துவங்குவர்.இந்த ஆண்டு, ஏரி எப்படியும் நிரம்பிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், இருக்கும் தண்ணீரும் வீணாக செல்வது, கவலை அளிக்கிறது.நாங்களும், மணல் மூட்டை கட்டி, பாதுகாப்பு ஏற்பாடு செய்தோம். இருந்தும், தண்ணீர் வெளியேறுகிறது.இந்த ஏரிக்கு, அருகிலுள்ள செய்யாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. அதன் நீர்வரத்து கால்வாயும் இந்த ஆண்டு துார் வாரப்படவில்லை. அதனால், மழை பெய்து ஆற்றில் வெள்ளம் வந்தாலும், தண்ணீர் அதிகம் வர வாய்ப்பில்லை. ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், இளையனார் வேலுார் அருகிலுள்ள, குண்டு மடுவுக்கு சென்று, மீண்டும் செய்யாற்றில் வீணாக கலக்கிறது. மதகை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X