போலீஸ் டைரி

Added : நவ 20, 2020
Share
Advertisement
குட்கா பறிமுதல்ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, கே.ஆர்.சி., நகரில் வசிப்பவர் பாபு, 63. இவர், ஸ்ரீபெரும்புதுார் பஜார் பகுதியில், மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது வீட்டில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைத்து, மளிகை கடையில் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, பாபு வீட்டை, போலீசார், நேற்று முன்தினம் சோதனை

குட்கா பறிமுதல்ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, கே.ஆர்.சி., நகரில் வசிப்பவர் பாபு, 63. இவர், ஸ்ரீபெரும்புதுார் பஜார் பகுதியில், மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது வீட்டில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைத்து, மளிகை கடையில் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, பாபு வீட்டை, போலீசார், நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 50 ஆயிரம் மதிப்புடைய குட்கா புகையிலையை, போலீசார் பறிமுதல் செய்து, பாபுவை கைது செய்தனர்.கொலை வழக்கில் ஐவர் கைதுசெங்கல்பட்டு: செங்கல்பட்டு, சிங்கபெருமாள்கோவில் ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த பாபு, 26, தனியார் உணவகத்தில் மாஸ்டராக பணிபுரிந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரணிக்கும், நில பிரச்னை இருந்தது. இதனால், ஆத்திரமடைந்த பரணி தரப்பினர், பாபுவை, கடந்த, 17ம் தேதி, இரவு, சரமாரியாக வெட்டிக்கொலை செய்து, தப்பிச்சென்றனர்.இது குறித்து, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெ.ஜெ., நகரைச் சேர்ந்த பரணி, 40, சாரதி, 25, திருக்குறள் தெரு ஆனிஷ், 25, திருத்தேரி கார்த்திக், 31, எம்.ஜி.ஆர்.,நகர் கார்த்திக், 29, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடுகின்றனர்.3 சவரன் திருட்டுதிருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ராஜேஸ்வரி நகரில் வசிப்பவர் பக்கிரி, 45.நேற்று முன்தினம் இரவு, இவர் வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால், குடும்பத்தினர் வெளியிலேயே இருந்தனர்.பின், நேற்று காலையில், வீட்டுக்கு சென்றபோது, பீரோவில் இருந்த, 3 சவரன் நகை, 4,000 ரூபாய், லேப்டாப், மொபைல் போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. பக்கிரி புகாரின்படி, கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X