பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தொற்று குறைவதால் கொரோனா சிறப்பு மையங்கள் மூடல்

Added : நவ 20, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம்; 'கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால், காஞ்சிபுரத்தில், மூன்று சிறப்பு மையங்கள் மூடப்பட்டன. வழக்கமான சிகிச்சை பணிகள் துவங்கியுள்ளன' என, சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், எழுச்சூர், மீனாட்சி மருத்துவமனை, கோளிவாக்கம் பல்லவன் பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய இடங்களில், கொரோனா சிகிச்சைக்கு, சிறப்பு மையங்கள் செயல்பட்டு

காஞ்சிபுரம்; 'கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால், காஞ்சிபுரத்தில், மூன்று சிறப்பு மையங்கள் மூடப்பட்டன.

வழக்கமான சிகிச்சை பணிகள் துவங்கியுள்ளன' என, சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், எழுச்சூர், மீனாட்சி மருத்துவமனை, கோளிவாக்கம் பல்லவன் பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய இடங்களில், கொரோனா சிகிச்சைக்கு, சிறப்பு மையங்கள் செயல்பட்டு வந்தன.இந்நிலையில், தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, மாவட்டத்தில் குறைந்து வருவதால், மூன்று இடங்களில் செயல்பட்ட சிறப்பு மையங்கள் மூடப்பட்டன.இது குறித்து, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் ஜீவா கூறியதாவது:மூன்று மாதங்களுக்கு முன், வைரஸ் தொற்று அதிகளவில் இருந்தது. இதற்காக, மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டது.மேலும், வைரஸ் பரிசோதனை உறுதி செய்யப்பட்டு, அதிக பாதிப்பு இல்லாதவர்களை தனிமைபடுத்தி தங்க வைப்பதற்காக, மூன்று இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன.அதேபோல், காஞ்சிபுரம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம், கூடுதல் மையமாக செயல்பட்டு வந்தது.இம்மாதம் ஆரம்பத்திலிருந்து, தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால், புறநோயாளிகள் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். சில மாதங்களாக, கொரோனா சிகிச்சைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது, வழக்கமான அனைத்து சிகிச்சைகளும் பார்க்கப்படுகிறது.நேற்று முன்தினம் ஒன்பது, நேற்று, 14 தொற்று நோயாளிகள் மட்டும், மாவட்டமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அரசு உத்தரவை கடைப்பிடித்து, பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X