சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்றத்தில் ஆஜரானவர் வெட்டிக்கொலை

Added : நவ 20, 2020
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் மம்சாபுரம் பால்நிறுவன ஊழியர் மணிகண்டன் 28, கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பிய பிரகாஷ் 32, வெட்டி கொலை செய்யப்பட்டார்.மணிகண்டன் கடந்த ஜூன் 8ல் புங்கங்குளத்தில் நண்பர் விக்னேஷ் தோட்டத்து வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியபோது கொலை செய்யப்பட்டார். அ.தி.மு.க., நகர் செயலாளராக இருந்த விஜயனின் மகள் காதல் திருமணத்திற்கு உதவியதால்

திருமங்கலம் : திருமங்கலம் மம்சாபுரம் பால்நிறுவன ஊழியர் மணிகண்டன் 28, கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பிய பிரகாஷ் 32, வெட்டி கொலை செய்யப்பட்டார்.

மணிகண்டன் கடந்த ஜூன் 8ல் புங்கங்குளத்தில் நண்பர் விக்னேஷ் தோட்டத்து வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியபோது கொலை செய்யப்பட்டார். அ.தி.மு.க., நகர் செயலாளராக இருந்த விஜயனின் மகள் காதல் திருமணத்திற்கு உதவியதால் மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இவ்வழக்கில் 'குண்டாறு' சக்திவேல், 'அட்டாக்' பிரகாஷ், விஜயன், வழக்கறிஞர் இன்பம், அருண்பிரதீப் ஆகியோர் மீது செக்கானுாரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், அருண் பிரதீப்பை கைது செய்தனர்.

பிரகாஷ் திருவாடைநல்லுார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். விஜயன், இன்பம் தலைமறைவாக உள்ளனர்.இவ்வழக்கு விசாரணை உசிலம்பட்டி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சக்திவேல், பிரகாஷ், அருண் பிரதீப் ஆஜராகினர். பின்னர் டூவீலரில் செக்கானுாரணி ரோட்டில் மேலஉரப்பனுார், கீழஉரப்பனுார் கண்மாய்களுக்கு நடுவே வந்த பிரகாஷை சிலர் வெட்டிக்கொலை செய்து உடலை கண்மாயில் வீசினர். எஸ்.பி., சுஜீத்குமார், டி.எஸ்.பி., வினோதினி, இன்ஸ்பெக்டர் முத்து விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X