பொது செய்தி

தமிழ்நாடு

திருப்போரூரில் இன்று சூரசம்ஹார விழா

Added : நவ 20, 2020
Share
Advertisement
திருப்போரூர்; கந்தசுவாமி கோவில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம், திருப்போரூர் காவல் நிலையத்தில், நேற்று நடந்தது.திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், கந்தசஷ்டி விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.இந்தாண்டு, கொரோனா தொற்று காரணமாக, இவ்விழா ரத்து

திருப்போரூர்; கந்தசுவாமி கோவில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம், திருப்போரூர் காவல் நிலையத்தில், நேற்று நடந்தது.திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், கந்தசஷ்டி விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.இந்தாண்டு, கொரோனா தொற்று காரணமாக, இவ்விழா ரத்து செய்யப்பட்டது. எனினும், கொடியேற்றம், சுவாமி உள்புறப்பாடு, சூரசம்ஹாரம் உள்ளிட்ட நிகழ்வுகள் மட்டும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.அதன்படி, இம்மாதம், 15ம் தேதி, பக்தர்கள் அனுமதியின்றி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.இதன் முக்கிய விழாவான சூரசம்ஹாரம், இன்று நடக்கிறது.இதை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம், திருப்போரூர் காவல் நிலையத்தில், நேற்று நடந்தது.இதில், மாமல்லபுரம் ஏ.எஸ்.பி., சுந்தரவதனன், திருப்போரூர் ஆய்வாளர் கலைச்செல்வி, கோவில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் பங்கேற்று, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதித்தனர்.இது குறித்து, மாமல்லபுரம் ஏ.எஸ்.பி., சுந்தரவதனன் கூறியதாவது:தீர்த்தவாரி கும்பாபிஷேகம், மதியம், 12:00 மணியில் இருந்து, 1:00 மணி வரை நடைபெறும். இதில் பங்கேற்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை.கோவில் நடை, 1:00 மணிக்கு திறக்கப்படும். பின், மதியம், 1:00 மணியிலிருந்து, இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி உண்டு.சூரசம்ஹாரம், மாலை, 5:00 மணியில் இருந்து, மாலை, 6:00 மணி வரை நடைபெறும். மொத்தமாக, 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 200 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். பக்தர்கள் பாதுகாப்புக்காக, 160 போலீசார் பணியில் ஈடுபடுவர்.இரண்டு மருத்துவ முகாம் அமைக்கப்படும். நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும்.குளத்தில் குளிக்க அனுமதியில்லை. ஓ.எம்.ஆர்., சாலை போக்குவரத்து மாற்றி, கிரிவலப்பாதையில் விடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X