சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலையூர் சிறுவன் லாரியில் கடத்தல்?

Added : நவ 20, 2020
Share
Advertisement
சென்னை; சேலையூர் சிறுவன், லாரியில் கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின்படி, தாழம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, சேலையூர் அடுத்த அகரம்தென், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர், மோகன், 34; பெயின்டர். இவரது மனைவி ரேவதி, 30. இவர்களது மகன் கிஷோர், 13.ரேவதி, வீட்டிலேயே பூ கட்டி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மதியம், தன் மகன் கிஷோருடன், தாழம்பூர் காவல் நிலையத்தில், மோகன்

சென்னை; சேலையூர் சிறுவன், லாரியில் கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின்படி, தாழம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, சேலையூர் அடுத்த அகரம்தென், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர், மோகன், 34; பெயின்டர். இவரது மனைவி ரேவதி, 30. இவர்களது மகன் கிஷோர், 13.ரேவதி, வீட்டிலேயே பூ கட்டி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மதியம், தன் மகன் கிஷோருடன், தாழம்பூர் காவல் நிலையத்தில், மோகன் புகார் ஒன்றை அளித்தார்.அதில், கூறப்பட்டிருந்ததாவது:என் மனைவி, பூ விற்கும் இடங்களுக்கு, மகன் கிஷோர் சென்று, அதற்கான, விற்பனை தொகையை வாங்கி வருவார்.நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, வேங்கடமங்கலத்திற்கு நடந்து சென்று, பூ விற்றதற்கான பணத்தை வாங்கி, கிஷோர், வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.அன்னை சத்யா நகர் பாலத்தில் வைத்து, மர்ம நபர்கள் சிலர் அவரை, கைக்குட்டையால் வாயை மூடி, கூண்டுவடிவ வாகனத்தில் கடத்தினர். மேலும், அவரிடம் இருந்து, 2,100 ரூபாயை பறித்துள்ளனர்.நீண்ட நேரம் கழித்து, கண் விழித்து பார்த்தபோது, சரக்கு ஏற்றிச் செல்லும் லாரியில் கிஷோருடன், மேலும், 50 சிறுவர்கள் இருந்துள்ளனர்.சுதாரித்து, உடன் இருந்தவர்களை, ஒவ்வொருவராக எழுப்பிய கிஷோர், லாரி சாதாரணமாக தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்ததால், அதிலிருந்து, எளிதில் குதித்து தப்பினார்.தப்பிய கிஷோர், சாலையோரம் பானிபூரி விற்கும் நபர் ஒருவரின், மொபைல் போன் வாயிலாக, எனக்கு தகவல் அளித்தார்.அவரை, திண்டிவனம் அடுத்த ஆலங்குப்பத்திற்கு, செல்ல அறிவுறுத்தினேன். ஆலங்குப்பத்திற்கு சென்ற கிஷோரை, வடநெற்குணத்தில் இருந்து வந்த, என் மாமனார் மீட்டு, அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.தொடர்ந்து, வடநெற்குணம் சென்று, நேற்று முன்தினம் இரவு, 3:00 மணியளவில், கிஷோரை மீட்டு, அகரம் தென் அழைத்து வந்தோம்.என் மகனுடன் சேர்த்து, 20 பேர் மட்டுமே தப்பிய நிலையில், 30 பேர் சிக்கி உள்ளனர். என் மகன் உட்பட, சிறுவர்களை கடத்தியவர்களை கண்டுபிடித்து, கைது செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.புகாரை பெற்ற தாழம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X