பொது செய்தி

தமிழ்நாடு

துார் வாரப்படாத பேரையூர் கண்மாய்கள்

Added : நவ 20, 2020
Share
Advertisement
பேரையூர் : பேரையூரில் இச்சிக்குளம் மற்றும் பெரிய கண்மாய் 50 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் சீமைகருவேல மரங்கள் மண்டியுள்ளன.இக்கண்மாய்கள் நிரம்பி அம்மாபட்டி, பாப்பையாபுரம், சுப்புலாபுரம், செங்குளம் கண்மாய்கள் வழியாக விருதுநகர் மாவட்ட கண்மாய்களுக்கு உபரிநீர் செல்லும். இதனால் பல ஊராட்சிகளில் குடிநீர் கிடைத்தது. தற்போது இந்த கண்மாய்கள் துார்வாரப்படாததால் சீமை

பேரையூர் : பேரையூரில் இச்சிக்குளம் மற்றும் பெரிய கண்மாய் 50 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் சீமைகருவேல மரங்கள் மண்டியுள்ளன.

இக்கண்மாய்கள் நிரம்பி அம்மாபட்டி, பாப்பையாபுரம், சுப்புலாபுரம், செங்குளம் கண்மாய்கள் வழியாக விருதுநகர் மாவட்ட கண்மாய்களுக்கு உபரிநீர் செல்லும். இதனால் பல ஊராட்சிகளில் குடிநீர் கிடைத்தது. தற்போது இந்த கண்மாய்கள் துார்வாரப்படாததால் சீமை கருவேலமரங்கள் மண்டி வளர்ந்துள்ளன. இதனால் கண்மாய் நீர்பிடிப்பு பகுதிகள் மண் மேவி மேடாகவுள்ளன. மழை காலங்களில் நீர் தேங்காமல் வெளியேறி வீணாகிறது.

கண்மாய்களில் நீர் தேக்க முடியாததால் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் கொடி கட்டி பறந்த வெற்றிலை கொடிக்கால் விவசாயம் அழிந்து விட்டது. டி.கல்லுபட்டி ஒன்றிய அதிகாரிகள் கண்மாய்களை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X