பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் கூட்டம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
மதுரை : மண்டல வேளாண் துறை அலுவலகத்தில் இணையவழி குறைதீர் முகாம் தொழில்நுட்பம் குறித்த விவசாயிகளுக்கான மாதிரி ஆலோசனை கூட்டம் இணை இயக்குனர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது.வேளாண் பகுதிகளில் நுாறு நாள் வேலை திட்டத்தால் ஆட்கள் கிடைக்காததால், இத்திட்டத்தை அமல்படுத்தக்கூடாதென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். உழுவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் நெல்

மதுரை : மண்டல வேளாண் துறை அலுவலகத்தில் இணையவழி குறைதீர் முகாம் தொழில்நுட்பம் குறித்த விவசாயிகளுக்கான மாதிரி ஆலோசனை கூட்டம் இணை இயக்குனர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது.

வேளாண் பகுதிகளில் நுாறு நாள் வேலை திட்டத்தால் ஆட்கள் கிடைக்காததால், இத்திட்டத்தை அமல்படுத்தக்கூடாதென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். உழுவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் நெல் அறுவடை இயந்திரம் வழங்கவும், பராமரிப்பை இலவசமாக செய்து தரவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் விவசாயத்திற்காக கண்மாய்களிலிருந்து பாரபட்சமின்றி அதிகாரிகள் தண்ணீர் திறக்க வேண்டும் எனவும், தண்ணீர் திறப்பு நேரங்களில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.மாவட்ட அளவிலான குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் இன்று( நவ.,20) நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X