பொது செய்தி

தமிழ்நாடு

கடற்கரையில் துாய்மை பணி

Added : நவ 20, 2020
Share
Advertisement
மெரினா; கடற்கரையில் சேகரமாகியுள்ள, குப்பையை அகற்றும் பணியை, மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, மெரினா அணுகு சாலை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரம்வரை, கடற்கரை மணற்பரப்பு உள்ளது. இந்த மணற்பரப்பு பகுதியில், கடலில் அடித்து வரப்பட்ட குப்பை உட்பட, ஏராளமான குப்பை குவிந்து கிடந்தன.கடற்கரையை அழகுபடுத்தும் பணியின் ஒரு

மெரினா; கடற்கரையில் சேகரமாகியுள்ள, குப்பையை அகற்றும் பணியை, மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, மெரினா அணுகு சாலை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரம்வரை, கடற்கரை மணற்பரப்பு உள்ளது. இந்த மணற்பரப்பு பகுதியில், கடலில் அடித்து வரப்பட்ட குப்பை உட்பட, ஏராளமான குப்பை குவிந்து கிடந்தன.கடற்கரையை அழகுபடுத்தும் பணியின் ஒரு பகுதியாக, நேற்று மாநகராட்சியினர், மணலை சலித்து, குப்பை கழிவுகளை மட்டும் அப்புறப்படுத்தும், 'பீச் சாண்ட்' இயந்திரங்களை கொண்டு, மணற்பரப்பில் கிடந்த குப்பை கழிவுகளை, அகற்றும் பணியை மேற்கொண்டனர்.மணற்பரப்பில் உள்ள குப்பையை, மூன்று இயந்திரங்கள் வாயிலாக அகற்றும் பணி நடந்து வருவதாகவும், இரண்டு நாளில் இந்த பணி முடிவடையும் எனவும், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X