பொது செய்தி

தமிழ்நாடு

2021 வரை சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லை

Added : நவ 20, 2020
Share
Advertisement
சென்னை; திருவள்ளூர் மாவட்ட ஏரிகளில், நீர் இருப்பு 7 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளதால், அடுத்தாண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 11.2 டி.எம்.சி., ஆகும். ஆந்திராவின் கண்டலேறு அணையில்

சென்னை; திருவள்ளூர் மாவட்ட ஏரிகளில், நீர் இருப்பு 7 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளதால், அடுத்தாண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 11.2 டி.எம்.சி., ஆகும். ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து செப்டம்பர் முதல், பூண்டி ஏரிக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது.இந்த நீர், பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு கால்வாய் வாயிலாக அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே வடகிழக்கு பருவ மழை துவங்கியதன் காரணமாக, நீர் வரத்து கிடைத்து வருகிறது.இதனால், நான்கு ஏரிகளின் நீர் இருப்பு, 7 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில், 2.93 டி.எம்.சி.,யும், புழலில், 2.40 டி.எம்.சி.,யும் உள்ளது. பூண்டியில், 1.58 டி.எம்.சி.,யும், சோழவரத்தில், 0.17 டி.எம்.சி.,யும் உள்ளது.கடந்தாண்டு, இதே நாளில், நான்கு ஏரிகளிலும் சேர்த்து, 3.16 டி.எம்.சி., மட்டுமே இருந்தது. தற்போதுள்ள, 7 டி.எம்.சி., நீரை பயன்படுத்தி, 202௧ ஜூன் வரை, சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதனால், சென்னையில் கோடைக்கால குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு நீங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X