பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலங்கள் கையகப்படுத்த முடிவா?

Added : நவ 20, 2020
Share
Advertisement
-மத்திய அரசின், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், புறநகரில் உள்ள, அகரம்தென் ஊராட்சியில், விரிவாக்க பணிகள் நடக்க உள்ளதாகவும், இதற்காக, தங்களின் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுமோ என்றும், விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர்.ஆய்வுசென்னை, புறநகரில் உள்ள, அகரம் தென் ஊராட்சிப் பகுதிகளில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் சமீபத்தில், ஆய்வு செய்தனர். அப்போது,
 விவசாய நிலங்கள் கையகப்படுத்த முடிவா?

-மத்திய அரசின், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், புறநகரில் உள்ள, அகரம்தென் ஊராட்சியில், விரிவாக்க பணிகள் நடக்க உள்ளதாகவும், இதற்காக, தங்களின் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுமோ என்றும், விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர்.ஆய்வுசென்னை, புறநகரில் உள்ள, அகரம் தென் ஊராட்சிப் பகுதிகளில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் சமீபத்தில், ஆய்வு செய்தனர். அப்போது, விவசாயிகளின் மொபைல் போன் எண் மற்றும் அவர்களது, நிலத்தின் சர்வே எண் ஆகிய தகவல்களை, ஆய்வு செய்து சரிபார்த்தனர்.இது குறித்து, விவசாயிகள் கேட்டபோது, 'மத்திய அரசின், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், எதிர்கால தேவைக்காக, விரிவாக்கப் பணிகள் நடக்க உள்ளதுடன், சாலை பராமரிப்பு மற்றும் பாதாள சாக்கடை திட்டம் உட்பட, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன' என, அதிகாரிகள் கூறி உள்ளனர்.முழு விபரம்அதேநேரம், திட்டத்திற்காக, 150 ஏக்கருக்கும் மேல், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக, அகரம் தென் கிராம விவசாயிகளிடையே, தகவல் பரவி வருகிறது.இதனால், தங்களின் விவசாய நிலங்கள் பறிக்கப்படுமா என, விவசாயிகள் அச்சம்அடைந்துள்ளனர்.சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'உலக வங்கி நிதியில், பணிகள் நடக்க உள்ளன. திட்டம் குறித்து, முழு விபரம் தெரியவில்லை. 'விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள தாக, வெளியான தகவல் வதந்தியாகும். விரைவில், உயர் அதிகாரிகள் தலைமையில், கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளது' என்றனர்
-- நமது நிருபர்- .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X