பொது செய்தி

தமிழ்நாடு

மீட்கப்பட்ட நீர்த்தேக்க குட்டையை மேம்படுத்த ரூ.42 லட்சம் ஒதுக்கீடு

Added : நவ 20, 2020
Share
Advertisement
திருவான்மியூர்- ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கும் முன், மாநகராட்சியால் மீட்கப்பட்ட நீர்த்தேக்க குட்டையை சீரமைக்க, 42 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.அடையாறு மண்டலம், 182வது வார்டு, திருவான்மியூர், ராஜாஜி நகரில், 5,700 சதுர அடி பரப்பளவில், நீர்த்தேக்க குட்டை உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையை விட, ராஜாஜி நகர் பள்ளமாக உள்ளதால், ஒவ்வொரு மழைக்கும், குட்டையில் தண்ணீர்

திருவான்மியூர்- ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கும் முன், மாநகராட்சியால் மீட்கப்பட்ட நீர்த்தேக்க குட்டையை சீரமைக்க, 42 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.அடையாறு மண்டலம், 182வது வார்டு, திருவான்மியூர், ராஜாஜி நகரில், 5,700 சதுர அடி பரப்பளவில், நீர்த்தேக்க குட்டை உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையை விட, ராஜாஜி நகர் பள்ளமாக உள்ளதால், ஒவ்வொரு மழைக்கும், குட்டையில் தண்ணீர் நிரம்பும்.இதனால், சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் அதிகரித்தது. இந்த குட்டையை ஆக்கிரமித்து, வீடு கட்ட சிலர் முயற்சி செய்தனர். இதற்காக, 10 ஆண்டுகளாக, குப்பை, கட்டட கழிவுகள் கொட்டி, குட்டையை சாலை மட்டத்திற்கு கொண்டு வந்தனர்.சமீபத்தில், மாநகராட்சி அதிகாரிகள், வார்டின் பழைய வருவாய் வரைபடத்தை ஆய்வு செய்தனர். அதில், நீர்த்தேக்க குட்டை என இருந்தது.இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, இடத்தை மீட்டனர். அதோடு, துார் வாரி, மழை நீர் தேங்கும் வகையில் கட்டமைக்க, முடிவு செய்தனர்.இதற்காக, வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ., வாகை சந்திரசேகர், தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 42 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளார்.இதில், துார் வாரி, கரையை பலப்படுத்தி, குட்டையின் மைய பகுதியில், நீர்த்தேக்க கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி, விரைவில் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X