'காம்பேக்ட்' லாரி பற்றாக்குறையால் கையால் குப்பை அள்ளப்படும் அவலம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
சோழிங்கநல்லுார்- 'காம்பேக்ட்' லாரி பற்றாக்குறையால், துாய்மை பணியாளர்கள் குப்பை கழிவுகளை கையால் அள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 9 வார்டுகள் உள்ளன. இங்கு, தினமும், 200 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதற்காக, 950 தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம், 1,100 ஊழியர்கள் உள்ளனர்.இவர்கள், வீடுதோறும்சென்று, சைக்கிளில் சேகரிக்கும் குப்பையை, ஆங்காங்கே
 'காம்பேக்ட்' லாரி பற்றாக்குறையால் கையால் குப்பை அள்ளப்படும் அவலம்

சோழிங்கநல்லுார்- 'காம்பேக்ட்' லாரி பற்றாக்குறையால், துாய்மை பணியாளர்கள் குப்பை கழிவுகளை கையால் அள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 9 வார்டுகள் உள்ளன. இங்கு, தினமும், 200 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதற்காக, 950 தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம், 1,100 ஊழியர்கள் உள்ளனர்.இவர்கள், வீடுதோறும்சென்று, சைக்கிளில் சேகரிக்கும் குப்பையை, ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தொட்டியில் கொட்டுவர். காம்பேக்ட் லாரியில் உள்ள தானியங்கி இயந்திரம், தொட்டியை அப்படியே துாக்கி குப்பையை லாரிக்குள் கொட்டும்.இதனால், தொட்டி குப்பையை, கையால் தொட வேண்டியதில்லை. காம்பேக்ட் லாரி பற்றாக்குறையால், தொட்டியில் சேரும் குப்பையை கையால் அள்ளி, சாதாரண லாரியில் கொட்டுகின்றனர்.மக்கும் மற்றும் மக்காத குப்பையை கலந்து அள்ளுவதால், ஊழியர்களுக்கு தொற்று நோய் பரவ, வாய்ப்பு அதிகம். மழையில் நனைந்த குப்பை, கையில் ஒட்டுவதால், அள்ளி கொட்டுவதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:கையுறை வழங்கப்பட்டு உள்ளது. இதை அணிந்து அள்ளும்போது, குப்பையில் இருந்து வடியும் கழிவு நீர், கையுறைக்குள் இறங்கி, கையில் அலர்ஜி ஏற்படுகிறது. வெயில் காலத்தில், இதுபோன்ற பிரச்னை இல்லை. மழைக்காலங்களில், குப்பையை கையாளுவதில், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. காம்பேக்ட் லாரி இருந்தால், வசதியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X