பொது செய்தி

தமிழ்நாடு

வேளச்சேரி - பெருங்குடி ரயில்வே சாலை பணி நிறுத்தம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
சென்னை- பருவ மழை முடியும்வரை, வேளச்சேரி - பெருங்குடி ரயில்வே சாலை அமைக்கும் பணியை நிறுத்த, மாநகராட்சி, ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளது.வேளச்சேரி -- பெருங்குடி ரயில் நிலையம் இடையே, ரயில் தண்டவாளம் அருகில், 3.5 கி.மீ., துாரத்தில், 80 அடி அகல உள்வட்ட சாலை அமைக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.இந்த சாலையால், வேளச்சேரி, பெருங்குடி சுற்றவட்டார மக்கள், ரயில் நிலையத்தை

சென்னை- பருவ மழை முடியும்வரை, வேளச்சேரி - பெருங்குடி ரயில்வே சாலை அமைக்கும் பணியை நிறுத்த, மாநகராட்சி, ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளது.வேளச்சேரி -- பெருங்குடி ரயில் நிலையம் இடையே, ரயில் தண்டவாளம் அருகில், 3.5 கி.மீ., துாரத்தில், 80 அடி அகல உள்வட்ட சாலை அமைக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.இந்த சாலையால், வேளச்சேரி, பெருங்குடி சுற்றவட்டார மக்கள், ரயில் நிலையத்தை எளிதில் அடைய முடியும். அதோடு, ஆதம்பாக்கம், வேளச்சேரி, உள்ளகரம்,மடிப்பாக்கம் பகுதி மக்கள், துரித பயணமாக, பெருங்குடி, தரமணி செல்ல முடியும்.ஐந்து ஆண்டுகளுக்குமுன், சாலை போடும் பணி துவங்கியது.வேளச்சேரி சுற்றுவட்டார பகுதியில் வடியும் மழை நீர், சதுப்பு நிலத்தை அடையும் வகையில், இந்த சாலையின் குறுக்கே, 120 அடி அகலத்தில், நீர் வழிப்பாதை உள்ளது.இந்த இடம் போக, மீதமுள்ள துாரத்தில், 2016ல் சாலை மற்றும் வடிகால் அமைக்கப்பட்டது. நீர்வழி பாதையில் தரைப்பாலம் அமைத்து, சாலையை இணைக்க, 2018ல், 4 கோடி ரூபாய், ரயில்வே நிர்வாகம் ஒதுக்கியது.பணி துவங்கிய நிலையில், நிர்வாக குளறுபடியால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2019ல், 4.50 கோடி ரூபாயில், மற்றொரு ஒப்பந்த நிறுவனம் பணி எடுத்தது.பணி ஆரம்பித்தபோது, பருவ மழை துவங்கியது. வேளச்சேரி, தரமணி, பெருங்குடி சுற்றுவட்டார பகுதியில் வடியும் மழை நீர், இந்த நீர் வழிப்பாதையில் செல்வதால், மாநகராட்சி வழங்கிய கடிதத்தின்படி, தரைப்பாலம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.இந்நிலையில், ஜனவரியில் துவங்கிய பணி, கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டது. மீண்டும் பணி துவங்க, ஒப்பந்த நிறுவனம் முடிவு செய்தது.நீர்வழிப் பாதையில் மண் கொட்டி பணி செய்ய வேண்டும். அப்படி செய்தால், நீரோட்டம் தடைபடும். இதனால், பருவ மழை முடியும் வரை, பணியை நிறுத்த, மாநகராட்சி, ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தியது. முறையான, கடிதமும் அனுப்பப்பட்டு உள்ளது.இதையடுத்து, தரைப்பாலம் அமைக்கும் பணியை, ரயில்வே நிர்வாகம் நிறுத்தியது. ஜனவரியில், மீண்டும் பணி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X