தரமில்லாத பேட்டரி வாகனங்களால் துாய்மை பணியாளர்கள் தவிப்பு

Added : நவ 20, 2020
Share
Advertisement
திருவொற்றியூர்- தரமில்லாத பேட்டரி வாகனங்கள், பளு தாங்காமல் உடைவதால், துாய்மை பணியாளர்கள் தவிக்க நேரிடுகிறது.சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகள், 1,503 தெருக்கள், 87 ஆயிரத்து, 416 குடியிருப்புகளில், 3.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். தினமும், 175 டன் குப்பை சேகரமாகிறது. அவற்றில் மக்கும் குப்பையை தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது.உரம் தயாரிக்க,

திருவொற்றியூர்- தரமில்லாத பேட்டரி வாகனங்கள், பளு தாங்காமல் உடைவதால், துாய்மை பணியாளர்கள் தவிக்க நேரிடுகிறது.சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகள், 1,503 தெருக்கள், 87 ஆயிரத்து, 416 குடியிருப்புகளில், 3.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். தினமும், 175 டன் குப்பை சேகரமாகிறது. அவற்றில் மக்கும் குப்பையை தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது.உரம் தயாரிக்க, மக்கும் குப்பையை எடுத்து செல்ல, மண்டலம் தோறும், பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த வாகனங்கள், 'சார்ஜ்' செய்து ஓட்டி செல்ல கூடிய வகையில், 1.85 லட்ச ரூபாய் மதிப்புடையது.திருவொற்றியூரில், வார்டு ஒன்றிற்கு, தலா, மூன்று வீதமும், நான்காவது வார்டிற்கு, கூடுதலாக ஒன்று சேர்த்து, மொத்தம், 43 பேட்டரி வாகனங்கள் உள்ளன.ஒன்றில், 240 கிலோ குப்பையை எடுத்து செல்ல முடியும். இந்த வாகனங்கள் தரமில்லாததால், தகரம் உடைவது தொடர்கதையாகி வருகிறது. சில நேரங்களில் பழுதால், நடுவழியில் நிற்கும் வாகனங்களால், ஊழியர்கள் தவிக்கின்றனர்.ஏறக்குறைய, இந்த மண்டலத்தில் மட்டும், 20க்கும் மேற்பட்ட வாகனங்கள், உடைந்து படுமோசமான நிலையில் உள்ளன.மணலிஇரண்டாவது மண்டலமான மணலியில், ஏழு வார்டுகள், 1,045 தெருக்கள், 30 ஆயிரத்து, 609 வீடுகளில், 1.80 லட்சம் பேர் வசிக்கின்றனர்.இங்கு, தினமும், 40 டன் குப்பை சேகரமாகிறது. அதில், 18 டன் மக்கும் குப்பையை உரமாக்கும் பணி, ஒன்பது மையங்களில் நடக்கின்றன. இதற்காக, 18 பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.அவற்றிலும் பல, தரமின்மையால் சேதம் அடைந்துள்ளதாக, ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து, பேட்டரி வாகனங்களின், உதிரி பாகங்கள் தரமானதாக உள்ளனவா என, சோதிக்க வேண்டும்.இனி வாங்கும் வாகனங்களையாவது, தரத்தை சோதித்து, கொள்முதல் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X