சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய கட்டடம் மீன் மார்க்கெட்டிற்கு 'சீல்'

Added : நவ 20, 2020
Share
Advertisement
வளசரவாக்கம்- வளசரவாக்கம் மண்டலத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடம் மற்றும் மீன் மார்க்கெட்டிற்கு, மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு, ஆற்காடு சாலை திருமுருகன் நகர், இரண்டாவது தெருவில், விதிகளை மீறி, முறையான அனுமதியின்றி குடியிருப்பு கட்டடம் கட்டப்படுவதாக, மாநகராட்சிக்கு புகார் வந்தது.இதையடுத்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்த

வளசரவாக்கம்- வளசரவாக்கம் மண்டலத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடம் மற்றும் மீன் மார்க்கெட்டிற்கு, மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு, ஆற்காடு சாலை திருமுருகன் நகர், இரண்டாவது தெருவில், விதிகளை மீறி, முறையான அனுமதியின்றி குடியிருப்பு கட்டடம் கட்டப்படுவதாக, மாநகராட்சிக்கு புகார் வந்தது.இதையடுத்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், விதிமீறலை உறுதி செய்தனர். இதன் பின், நேற்று முன்தினம் அந்த கட்டடத்திற்கு, போலீசார் உதவியுடன், 'சீல்' வைக்கப்பட்டது.அதேபோல், 150வது வார்டு செட்டியார் அகரம் பிரதான சாலையில், மீன் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வந்தது. மீன் மார்க்கெட் அமைக்க, 300 சதுர அடிக்கு அனுமதி பெற்று, 3,000 சதுர அடிக்கு, 'ஷீட்' அமைத்து, முறைகேடாக விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தது.இதுகுறித்த புகாரைஅடுத்து, விதிகளை மீறி அமைக்கப்பட்ட மீன் மார்க்கெட்டை, மாநகராட்சி அதிகாரிகள், 17ம் தேதி போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தி சீல் வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X