சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமாநில வாலிபர்களை தாக்கிய 3 பேர் கைது

Added : நவ 20, 2020
Share
Advertisement
கொரட்டூர்- கொரட்டூர் அருகே, வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, கொரட்டூர், வைகை நகர், பிரதான சாலையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அனில் சவுகான், 23. அசாமைச் சேர்ந்த பிரபு, 23. ஆகியோர் தங்கி உள்ளனர்; இருவரும், தனியார் நிறுவன ஊழியர்கள்.இவர்கள், தீபாவளி அன்று இரவு, வீட்டருகே, உள்ள சாலையில் பட்டாசு வெடித்தனர். அப்போது, கொரட்டூர்,

கொரட்டூர்- கொரட்டூர் அருகே, வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, கொரட்டூர், வைகை நகர், பிரதான சாலையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அனில் சவுகான், 23. அசாமைச் சேர்ந்த பிரபு, 23. ஆகியோர் தங்கி உள்ளனர்; இருவரும், தனியார் நிறுவன ஊழியர்கள்.இவர்கள், தீபாவளி அன்று இரவு, வீட்டருகே, உள்ள சாலையில் பட்டாசு வெடித்தனர். அப்போது, கொரட்டூர், ஐவேஸ் நகரைச் சேர்ந்த சதீஷ்குமார், 22, அவரது நண்பர்கள் அய்யப்பன், 25 மற்றும் ஹரிநாராயணன், 22, ஆகியோர் சென்றனர்.அவர்கள், மீது பட்டாசு தீப்பொறி விழுந்தது. இதனால், அவர்கள், வடமாநில தொழிலாளர்களிடம் தகராறு செய்து, அவர்களை சரமாரியாக தாக்கினர்.அவர்களுக்கு ஆதரவாக, கொரட்டூரைச் சேர்ந்த ராமசந்திரன், 20, பிரபாகரன், 21, சாந்தகுமார், 23 மற்றும் 17 வயது சிறுவனும் சேர்ந்து, இருவரையும் அடித்தனர். பலத்த காயமடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக விசாரித்த கொரட்டூர் போலீசார், மேற்கண்ட, ஏழு பேரையும், நேற்று மாலை கைது செய்தனர். சிறுவனை சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X