கழுத்து நெரித்து பெண் கொலை? பூந்தமல்லியில் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழுத்து நெரித்து பெண் கொலை? பூந்தமல்லியில் பரபரப்பு

Added : நவ 20, 2020
Share
பூந்தமல்லி; பூந்தமல்லியில், பெண் ஒருவர், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள கணவரை, போலீசார் தேடி வருகின்றனர்.பூந்தமல்லி, ரைட்டர் தெருவைச் சேர்ந்தவர் நுாருதீன், 52; பெட்ரோல் பங்கில் பணி புரிகிறார். இவரது மனைவி அசினா பேகம், 42. இவர்களுக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.மகளுக்கு திருமணமாகி, கணவருடன், அதே பகுதியில் வசித்து

பூந்தமல்லி; பூந்தமல்லியில், பெண் ஒருவர், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள கணவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி, ரைட்டர் தெருவைச் சேர்ந்தவர் நுாருதீன், 52; பெட்ரோல் பங்கில் பணி புரிகிறார். இவரது மனைவி அசினா பேகம், 42. இவர்களுக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.மகளுக்கு திருமணமாகி, கணவருடன், அதே பகுதியில் வசித்து வருகிறார். வீட்டில், மூன்று பேர் மட்டும் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை, வழக்கம் போல், மகன் அல்டாப் வேலைக்கு சென்றார்.சிறிது நேரம் கழித்து, தாயின் மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ஆனால், மொபைல் போன் எடுக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அல்டாப், வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அசினா பேகம், மயங்கிய நிலையில் கிடந்தார்.அக்கம் பக்கத்தினர் உதவியுடன், அசினா பேகத்தை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றார். மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் இறந்தது தெரியவந்தது.போலீசார் விரைந்து, உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில், ஒயரால் கழுத்து நெரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.மேலும், அவரது கணவர் நுாருதீன் வீட்டில் இல்லை. அவரது, மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாக, மனைவியை கொலை செய்துவிட்டு, கணவர் தலைமறைவாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இது குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர். தலைமறைவாக உள்ள நுாருதீன் பிடிபட்டாலே, உண்மை நிலவரம் தெரியவரும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள நுாருதீனை, பூந்தமல்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X