பொது செய்தி

தமிழ்நாடு

72 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் போலீஸ் கமிஷனர் உத்தரவு

Added : நவ 20, 2020
Share
Advertisement
சென்னை; சென்னையில், 72 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுஉள்ளார்.சமீபத்தில், கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கிய, அயனாவரத்தைச் சேர்ந்த, ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, அயனாவரம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், இவர், ஆவடி டேங்க்

சென்னை; சென்னையில், 72 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுஉள்ளார்.சமீபத்தில், கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கிய, அயனாவரத்தைச் சேர்ந்த, ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, அயனாவரம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், இவர், ஆவடி டேங்க் பேக்டரி குற்றப்பிரிவுக்கு, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.பள்ளிக்கரணை அருகே, பெரும்பாக்கத்தில், புதிய காவல் நிலையம் உருவாக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த, ரஞ்சித்குமார், அங்கு சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த, தர்மா, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும்; செழியன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும்; குமார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும், வியாசர்பாடி சட்டம் - ஒழுங்கில் பணிபுரிந்த ஸ்ரீனிவாசன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இவர்கள் உட்பட, 72 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X