சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாசில்தார் அலுவலகம் முற்றுகை

Added : நவ 20, 2020
Share
Advertisement
திருவொற்றியூர்: உதவித்தொகை இழுத்தடிப்பை கண்டித்து, மாற்றுத் திறனாளிகள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.சென்னை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, மற்ற இடங்களில், 7ம் தேதிக்கு முன்பே வழங்கப்பட்டு விட்ட நிலையில், திருவொற்றியூர் வட்டத்திற்கு உட்பட்ட, 218 பேருக்கு வழங்கப்படவில்லை.இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் கடந்த, 9ம் தேதி,

திருவொற்றியூர்: உதவித்தொகை இழுத்தடிப்பை கண்டித்து, மாற்றுத் திறனாளிகள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.சென்னை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, மற்ற இடங்களில், 7ம் தேதிக்கு முன்பே வழங்கப்பட்டு விட்ட நிலையில், திருவொற்றியூர் வட்டத்திற்கு உட்பட்ட, 218 பேருக்கு வழங்கப்படவில்லை.இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் கடந்த, 9ம் தேதி, அதிகாரிகளை சந்தித்தபோது, அலட்சியமாக பதிலளித்ததாக தெரிகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம், கழிப்பறை மற்றும் தரை தளத்திற்கே அதிகாரிகள் வந்து மனு வாங்கும் வசதிகளும் இங்கில்லை.இதனால், ஆத்திரம் அடைந்த, 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், நேற்று மாலை, திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள், உதவித்தொகை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக, உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X