திருப்பதி: கண் பார்வையற்றோர், படிக்க இயலாதவர்களுக்காக, பேசும் புத்தம் என்ற பெயரிலான ஆன்மிக புத்தகம், திருமலை தேவஸ்தானம் சார்பில், வெளியிடப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, திருமலையில் நேற்று, கண் பார்வை அற்றவர்களுக்கான பேசும் புத்தகத்தை வெளியிட்டார்.
தமிழ்:
அதில் பகவத் கீதை, சம்பூர்ண அனுமன் சாலீஸா என இரு புத்தகங்கள் உள்ளன. பகவத் கீதை ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் உள்ளது. அனுமன் சாலீஸா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், அசாமிஉள்ளிட்ட மொழிகளில் உள்ளது. இந்த புத்தகங்களுடன், ஒரு மொபைல் போனும் வழங்கப்படும்.

முதல் முறை:
கண் பார்வையற்றவர்கள், படிக்க இயலாதவர்கள், இந்த புத்தகத்தை திறந்து, அதில் உள்ள எழுத்துகள் மீது மொபைல் போனை கொண்டு சென்றால், அந்த பக்கத்தில் உள்ள ஸ்லோகங்கள், விளக்கங்கள் உள்ளிட்டவை, 'ஆடியோ' மூலம் கேட்கும். டில்லியைச் சேர்ந்த ஹயோமா என்ற நிறுவனம், இந்த புத்தகத்தை வடிவமைத்துள்ளது. உலகத்திலேயே முதல் முறையாக, இதுபோன்ற பேசும் புத்தகம், நம் நாட்டில் வெளியிடப்பட்டுஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE