சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடியில் இருந்து தவறி விழுந்த இருவர் உயிரிழப்பு

Added : நவ 20, 2020
Share
Advertisement
சென்னை; சென்னையில், வெவ்வேறு இடங்களில், மாடியில் இருந்து தவறி விழுந்த இருவர், பரிதாபமாக உயிரிழந்தனர்.மதுரையைச் சேர்ந்தவர் வேங்கைராஜன், 27. சென்னை, புழுதிவாக்கம், ராம் நகர் வடக்கு, 11வது தெருவில், வீடு எடுத்து நண்பர்களுடன் தங்கியிருந்தார்.புழுதிவாக்கம், பாலாஜி நகரில், மருத்துவமனை உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரிந்த அவருக்கு, நான்கு மாதங்களுக்கு முன், மதுரை,

சென்னை; சென்னையில், வெவ்வேறு இடங்களில், மாடியில் இருந்து தவறி விழுந்த இருவர், பரிதாபமாக உயிரிழந்தனர்.மதுரையைச் சேர்ந்தவர் வேங்கைராஜன், 27. சென்னை, புழுதிவாக்கம், ராம் நகர் வடக்கு, 11வது தெருவில், வீடு எடுத்து நண்பர்களுடன் தங்கியிருந்தார்.புழுதிவாக்கம், பாலாஜி நகரில், மருத்துவமனை உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரிந்த அவருக்கு, நான்கு மாதங்களுக்கு முன், மதுரை, தெப்பக்குளத்தைச் சேர்ந்த மோனிஷா என்பவருடன் திருமணமானது.தலை தீபாவளியை முன்னிட்டு, மதுரை சென்ற அவர், இரண்டு நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று அதிகாலை, அந்த வீட்டில் தங்கியிருந்த அருண் என்பவர் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் அருகில் இருந்த காலிமனையில், வேங்கைராஜன் இறந்து கிடந்தார்.தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் விசாரணையில், வேங்கைராஜன் துாக்க கலக்கத்தில் பால்கனியில் இருந்து, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.இது குறித்து, மடிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.l திருவண்ணாமலை மாவட்டம், மாமண்டூரைச் சேர்ந்தவர் முனியாண்டி. அவர் மகன், அஜித்குமார், 25, பூக்கடை, பெத்தநாயக்கன் தெருவில், வீடு ஒன்றில் தங்கி, தேனாம்பேட்டையில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் இரவு, வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து, தவறி விழுந்து படுகாயம்அடைந்தவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், போகும் வழியிலேயே அவர் இறந்தார்.இது குறித்து, பூக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.விசாரணையில், மதுப் போதையில் இருந்த அஜித், மூன்றாவது மாடியில் இருந்து, தவறி விழுந்து உயிரிழந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X