3 நாட்களில் 7 கண்டங்கள், 208 நாடுகளுக்கு பயணித்து கின்னஸ் சாதனை

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
துபாய்: யுஏஇ.,யை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், 3 நாட்களில் உலகின் 7 கண்டங்களுக்கும் பயணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த நாட்களில் 208 நாடுகளுக்கு அவர் பயணித்துள்ளார்.ஐக்கிய அரபு எமிரேட்சை(யுஏஇ) சேர்ந்த பெண் டாக்டர் காவ்லா அல் ரோமைதி. இவர் 3 நாட்கள் 14 மணி நேரங்கள் 46 நிமிடங்கள் 48 நொடிகளில், உலகின் 7 கண்டங்களுக்கும் பயணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த பிப்.,13ம் தேதி,
UAE Woman, New World Record, Travels, 7_Continents, 208_Countries

துபாய்: யுஏஇ.,யை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், 3 நாட்களில் உலகின் 7 கண்டங்களுக்கும் பயணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த நாட்களில் 208 நாடுகளுக்கு அவர் பயணித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்சை(யுஏஇ) சேர்ந்த பெண் டாக்டர் காவ்லா அல் ரோமைதி. இவர் 3 நாட்கள் 14 மணி நேரங்கள் 46 நிமிடங்கள் 48 நொடிகளில், உலகின் 7 கண்டங்களுக்கும் பயணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த பிப்.,13ம் தேதி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது பயணத்தை முடித்த இவர், இந்த நாட்களில் 208 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.


latest tamil news



இதுகுறித்து காவ்லா கூறுகையில், 'இப்பயணம் மிக்கடினமாக இருந்தது. பல நேரங்களில் பயணத்தை பாதியில் முடிக்க எண்ணினேன். இருப்பினும் தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எனது பயணத்தை தொடங்கினேன். விமான நிலையங்களில் பல்வேறு தடைகளை சந்திக்க நேர்ந்தது. யுஏஇ.,யில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். நான் அவர்களது நாடுகளுக்கு பயணித்து, அவர்களின் கலாசாரத்தை அறிந்து கொள்ள விரும்பினேன்' இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan Babu - madurai,இந்தியா
23-நவ-202011:29:20 IST Report Abuse
Saravanan Babu இது உண்மையான நியூஸ் ஆஹ் இருக்க வாய்ப்பே இல்லை .. எப்படி கின்னஸ் ரெகார்டஸ் ல சேர்க்க முடியும் ?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-நவ-202013:07:20 IST Report Abuse
Natarajan Ramanathan சரியான லூசுப்பெண். மூன்றே நாட்களில் 208 நாடுகளுக்கு எப்படி பயணிக்க முடியும்? விமானத்தில் பல நாடுகளுக்கு மேலே பறந்ததை எல்லாம் கணக்கில் எடுத்தாலும் அத்தனை நாடுகள் வராதே? இந்த லட்சணத்தில் எல்லா 200+ நாடுகளின் கலாச்சாரத்தை அறிய விரும்பினாராம்
Rate this:
Cancel
சாதிக், சென்னை ஃப்ளைட்டை விட்டு இறங்காமலே ஒவ்வொரு நாடாக பறந்தால் தான் 3 நாட்களில் 200 நாடுகளை ஜஸ்ட் தொட்டுபோக முடியும். இந்த லட்சணத்தில் பன்னாட்டு மக்களின் கலாச்சாரம் அறியப்புறப்பட்டாராம். தலை சுத்துதப்பா!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X