பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் இன்று வேல் யாத்திரை: பாதுகாப்பு பணியில் 750 போலீசார்

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில் இன்று நடக்கும் வேல் யாத்திரை பாதுகாப்பு பணியில், 750 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஈரோடு சம்பத் நகரில் இன்று காலை, 10:00 மணிக்கு, பா.ஜ., சார்பில் வேல் யாத்திரை துவங்குகிறது. மாநில தலைவர் முருகன் பங்கேற்கிறார். முன்னதாக, சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்கிறார். பின், சம்பத் நகர் வந்து வேல் யாத்திரை

ஈரோடு: ஈரோட்டில் இன்று நடக்கும் வேல் யாத்திரை பாதுகாப்பு பணியில், 750 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஈரோடு சம்பத் நகரில் இன்று காலை, 10:00 மணிக்கு, பா.ஜ., சார்பில் வேல் யாத்திரை துவங்குகிறது. மாநில தலைவர் முருகன் பங்கேற்கிறார். முன்னதாக, சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்கிறார். பின், சம்பத் நகர் வந்து வேல் யாத்திரை துவக்குகிறார். இதற்காக எஸ்.பி., தங்கதுரை தலைமையில், 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஈரோடு, வில்லரசம்பட்டியில், முருகன் தங்கும் விடுதி, சென்னிமலை கோவில் வளாகம், ஈரோடு -சென்னிமலை வழித்தடம், சம்பத் நகர் பகுதிகளில் ஈரோடு உள்ளூர் போலீசார், ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். ஐ.ஜி., பெரியய்யா மேற்பார்வையில் இப்பணி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X