பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.4.85 கோடி திட்டப்பணியால் ஜொலிக்கும் வெள்ளோடு சரணாலயம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஈரோடு: வெள்ளோடு பறவைகள் சரணாலயம், 4.85 கோடி ரூபாய் திட்டப்பணியால், ஜொலிக்க துவங்கி உள்ளது. ஈரோடு அருகேயுள்ள, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், 215 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு செப்., முதல் பிப்., வரையிலான சீசனில், பெலிகான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைக்கெடா, பெரிய நீர் காகம், பாம்புதாரா, சாம்பல் நாரை, வெண்மார்பு மீன் கொத்தி, ஜெம்புகோரி என பல்வேறு பறவைகள் வந்து செல்லும். வெளி நாட்டு

ஈரோடு: வெள்ளோடு பறவைகள் சரணாலயம், 4.85 கோடி ரூபாய் திட்டப்பணியால், ஜொலிக்க துவங்கி உள்ளது. ஈரோடு அருகேயுள்ள, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், 215 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு செப்., முதல் பிப்., வரையிலான சீசனில், பெலிகான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைக்கெடா, பெரிய நீர் காகம், பாம்புதாரா, சாம்பல் நாரை, வெண்மார்பு மீன் கொத்தி, ஜெம்புகோரி என பல்வேறு பறவைகள் வந்து செல்லும். வெளி நாட்டு பறவைகளும், இனப்பெருக்கத்துக்காக வந்து செல்லும். இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், 4.85 கோடி ரூபாயில் நடக்கும், மேம்பாட்டு பணி நிறைவுறும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜு விஸ்வநாதன் கூறியதாவது: குளக்கரை பலப்படுத்தி, நடைபாதை பகுதியில் பேவர்பிளாக் கற்கள் பதித்து, தேவையான இடங்களில் கைபிடி அமைத்துள்ளோம். இங்கு வந்து செல்லும் பறவைகள் குறித்த, 15 நிமிட திரைப்படத்தை, பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில், சிறிய திரையரங்கு அமைத்துள்ளோம். தவிர, போட்டோ ஷூட் செய்வதற்கான இடம், ஓய்வறை, கேன்டீன் வசதி செய்துள்ளோம். இயற்கையான முறையில் 'வெள்ளோடு சரணாலயம்' என்ற அலங்கார வளைவு அமைத்துள்ளோம். தவிர, பறவைகள் அமர்ந்து, ஓய்வெடுக்கும் வகையில் இயற்கையான திட்டு, மரங்கள் அமைத்துள்ளோம். சரணாலயத்தின் எதிரே உள்ள இடத்தை, வாகன நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இப்பணி அனைத்தும் வரும், டிச., இறுதிக்குள் நிறைவு பெற்று, அரசு உத்தரவிட்டதும், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X