பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா உணவக பெண் ஊழியர்கள் முதல்வரிடம் மனு

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஈரோடு: 'சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்' என்று, ஈரோடு மாவட்ட அம்மா உணவக பெண் ஊழியர்கள், தமிழக முதல்வரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்ட, அம்மா உணவக பணியாளர்கள் நலச்சங்க தலைவி செல்வி தலைமையில், நேற்று முன்தினம் பவானி வழியாக சேலம் சென்று கொண்டிருந்த, தமிழக முதல்வர் பழனிசாமியிடம், அளித்த மனுவில் கூறியுள்ள விபரம்: கடந்த, 2013 ஜூன் முதல், எட்டு ஆண்டுகளாக, 158 பெண் ஊழியர்கள்,

ஈரோடு: 'சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்' என்று, ஈரோடு மாவட்ட அம்மா உணவக பெண் ஊழியர்கள், தமிழக முதல்வரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்ட, அம்மா உணவக பணியாளர்கள் நலச்சங்க தலைவி செல்வி தலைமையில், நேற்று முன்தினம் பவானி வழியாக சேலம் சென்று கொண்டிருந்த, தமிழக முதல்வர் பழனிசாமியிடம், அளித்த மனுவில் கூறியுள்ள விபரம்: கடந்த, 2013 ஜூன் முதல், எட்டு ஆண்டுகளாக, 158 பெண் ஊழியர்கள், அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதுவரை, அரசிடமிருந்து எந்த ஒரு சலுகையும் எங்களுக்கு இல்லை. தினமும், 250 ரூபாய் மட்டும் சம்பளமாக பெறுகிறோம். எட்டு ஆண்டுகளாக, ஒரே சம்பளம் தான் வாங்குகிறோம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகைகள் மற்றும் எந்த ஒரு அரசு விடுமுறையும் எங்களுக்கு இல்லை. இது குறித்து, ஏற்கனவே ஈரோடு கலெக்டர், மாநகராட்சி கமிஷனர். உள்ளாட்சி துறை அமைச்சர், ஈரோட்டில் உள்ள இரண்டு எம்.எல்.ஏ.,க்களிடம் மனு அளித்துள்ளோம். சம்பள உயர்வு, சலுகைகளை தமிழக முதல்வர் தான் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். எங்கள் வாழ்வாதாரம் உயர, சம்பளத்தை உயர்த்தி அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும். கொரோனா காலத்திலும் கூட, அரசின் அறிவுரைக்கு ஏற்ப காலை, 4:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, பணியாற்றினோம். கருணை அடிப்படையில், சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X