பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளை தாக்கும் பெரியம்மை: மருத்துவரை அணுக யோசனை

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மாடுகளை பெரியம்மை நோய் (லும்பி ஸ்கின் டிசீஸ்) தாக்குகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படும் இந்நோய், ஈ, கொசு, உண்ணி மூலமும், கறவையாளர், கன்றுக்குட்டிகள் பாதித்த பாலை குடிப்பதாலும் பரவுகிறது. நோய் பாதித்த கால்நடைகளின் கண்ணில் நீர் வடிதல், மூக்கில் சளி வருதல், கடுமையான காய்ச்சல், உடல் முழுவதும் வீக்கம் ஏற்படுதல், உருண்டையான கட்டிகள் உடைந்து சீழ்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மாடுகளை பெரியம்மை நோய் (லும்பி ஸ்கின் டிசீஸ்) தாக்குகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படும் இந்நோய், ஈ, கொசு, உண்ணி மூலமும், கறவையாளர், கன்றுக்குட்டிகள் பாதித்த பாலை குடிப்பதாலும் பரவுகிறது. நோய் பாதித்த கால்நடைகளின் கண்ணில் நீர் வடிதல், மூக்கில் சளி வருதல், கடுமையான காய்ச்சல், உடல் முழுவதும் வீக்கம் ஏற்படுதல், உருண்டையான கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறுதல், நிணநீர் சுரப்பிகள் பெரிதாக காணப்படுதல், கால்கள் வீங்குதல் இதன் அறிகுறியாகும். இந்நோய்க்கு தடுப்பூசி இல்லை. உடல் வீக்கம், காயத்துக்கு சிகிச்சை வழங்கினால், மாட்டின் கறவை திறனை தக்க வைக்கலாம். தினமும், 30 கிராம் சிறுகுறிஞ்சான் பொடி?ய, வெல்லம் கலந்து கொடுத்தால் தொற்று பாதிப்பை தவிர்க்கலாம். மஞ்சள் தூள், கொழுந்து வேப்பிலை, வேப்ப எண்ணெய் கலந்து, காயங்களில் பூசலாம். காயங்களில் ஈ மொய்க்காமல் பார்க்க வேண்டும். கொப்பரை தேங்காய்-1, வெல்லம்-100 கிராம், வெந்தயம்-50 கிராம், மஞ்சள் தூள்-30 கிராம் சேர்த்து, இருமுறை மாட்டுக்கு கெடுத்தால், தேவையான சத்து கிடைக்கும். இந்நோய் பாதித்த மாட்டை, பண்ணையில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். தீவனம், தண்ணீர் பாத்திரத்தை தனியாக பயன்படுத்த வேண்டும். கறவையாளர் கை சுத்தம் செய்ய வேண்டும். ஈ, கொசுக்களுக்கு மருந்து தெளித்து, விரட்ட வேண்டும். புண், கட்டிகளை சுத்தம் செய்த துணிகளை தீயில் எரிக்க வேண்டும். இந்நோய், 60 சதவீத மாடுகளை பாதிக்கும். பால் உற்பத்தி தற்காலிகமாக குறையும். சினை பிடித்தல் பாதிக்கும். தீவனம் உண்ணாது. இளம் சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும். சில மாடுகளில் மடி நோய் ஏற்படும். இந்நோய் அறிகுறி தென்பட்டால், அருகிலுள்ள கால்நடை டாக்டரை அணுகி, தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு, இறப்பை குறைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X