பொது செய்தி

தமிழ்நாடு

அரசு செயலர் உதவியால் சில மணி நேரத்தில் சான்றிதழ் பெற்ற மாணவி

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஈரோடு: மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு முதல் நாளில், பிறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்தி, சில மணி நேரத்தில் வேறு சான்று பெற, அரசு செயலர் உதவிய சம்பவம், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.ஈரோடு மாவட்டம், சித்தோடு, ராயபாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்; விவசாயி. இவர் மகள் கோபிகா, 18, பிளஸ் 2 முடித்து, மருத்துவ படிப்புக்கான மதிப்பெண் பெற்று, நீட்
அரசு செயலர்,சான்றிதழ், மாணவி

ஈரோடு: மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு முதல் நாளில், பிறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்தி, சில மணி நேரத்தில் வேறு சான்று பெற, அரசு செயலர் உதவிய சம்பவம், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


ஈரோடு மாவட்டம், சித்தோடு, ராயபாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்; விவசாயி. இவர் மகள் கோபிகா, 18, பிளஸ் 2 முடித்து, மருத்துவ படிப்புக்கான மதிப்பெண் பெற்று, நீட் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார். சித்தோடு அரசு பள்ளியில் படித்ததால், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், இவருக்கு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் சென்னையில் நடந்த, மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க செல்லும் நிலையில், மாணவி கோபிகாவின் பிறப்பு சான்றிதழில், எழுதப்பட்ட பெயரில் எழுத்து பிழை இருந்தது. சென்னை செல்ல ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருந்ததால், இ-சேவை மையத்தில் பதிவு செய்தால், குறைந்தபட்சம் மூன்று நாட்களாகும் என, அறிந்தார். மாணவியின் தந்தை சுப்பிரமணி, தன் நண்பரான வக்கீல் சென்னியப்பன் மூலம், ஈரோடு மாவட்ட முன்னாள் கலெக்டரும், தற்போதைய அரசு தொல்லியல் துறை ஆணையருமான உதயசந்திரனை இ-மெயிலில் தொடர்பு கொண்டார். கல்வி தொடர்பான உதவியை, செய்து கொடுக்கும்படி, மெயிலில் தகவல் அனுப்பினர். மெயில் விபரத்தை பார்த்த ஆணையர் உதயசந்திரன், ஈரோடு கலெக்டர் கதிவரனுக்கு அதை அனுப்பி, தன் நண்பர் மூலம் பணியை துரிதமாக முடித்து வழங்குவதையும் கண்காணித்துள்ளார். மாணவியின் சான்றிதழில் உள்ள பிழையை உடன் திருத்தி வழங்க, ஈரோடு தாசில்தார் பரிமளாவுக்கு, கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். இதையடுத்து, உரிய ஆவணங்கள் இருந்ததால், பிறப்பு சான்றிதழில் பிழை திருத்தம் செய்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, அவசர கால பிரிவு அதிகாரி கோகிலவாணி ஆகியோர், அந்த மாணவியிடம் வேறு சான்றிதழை வழங்கினர். அந்த மாணவி, கவுன்சிலிங்கில் பங்கேற்று, மருத்துவ படிப்புக்கான இடத்தை பெற்றுள்ளார். இச்சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியாகி, முன்னாள், இந்நாள் கலெக்டர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baala - coimbatore,இந்தியா
20-நவ-202010:44:34 IST Report Abuse
baala நல்லது செய்பவர்களை எப்போதும் வாழ்த்துவோம், அல்லது செய்பவர்களை எப்போதும் தூற்றுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X