சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணாமல் போனவர் உடல் ப.வேலூர் ஆற்றில் மீட்பு

Added : நவ 20, 2020
Share
Advertisement
மொடக்குறிச்சி: திருச்சி, தொட்டியத்தை சேர்ந்தவர் லோகநாதன், 30, தனியார் நிறுவன ஊழியர். மொடக்குறிச்சி, கஸ்பாபேட்டையில், மனைவி, மகளுடன் வசித்தார். தீபாவளி பண்டிகைக்காக பெருமாபாளையம் மாமியார் வீட்டுக்கு சென்றார். கடந்த, 15ல் கருவேலம்பாளையம் காவிரி ஆற்றில் குளித்தபோது மாயமானார். நான்கு நாட்களாக தேடியும் உடல் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை, பரமத்திவேலூர் அருகே காவிரி

மொடக்குறிச்சி: திருச்சி, தொட்டியத்தை சேர்ந்தவர் லோகநாதன், 30, தனியார் நிறுவன ஊழியர். மொடக்குறிச்சி, கஸ்பாபேட்டையில், மனைவி, மகளுடன் வசித்தார். தீபாவளி பண்டிகைக்காக பெருமாபாளையம் மாமியார் வீட்டுக்கு சென்றார். கடந்த, 15ல் கருவேலம்பாளையம் காவிரி ஆற்றில் குளித்தபோது மாயமானார். நான்கு நாட்களாக தேடியும் உடல் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை, பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றங்கரையோரத்தில், லோகாதன் உடல் கிடந்தது. மலையம் பாளையம் போலீசார் மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உறவினருடன் லோகநாதன் ஆற்றில் குளித்தபோது, ஜேடர்பாளையம் கரையில் ஒரு குழந்தை, ஆற்றில் மூழ்கியுள்ளது. அதை கண்டுபிடிக்க இருவரும் ஆற்றில் நீந்தி சென்றுள்ளனர். உறவினர் திரும்பிய நிலையில், லோகநாதன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரர்கள், நான்கு நாள் தேடி கிடைக்காத நிலையில், பரமத்தி வேலூர் அருகே உடல் கரை ஒதுங்கியுள்ளது. இறந்த லோகநாதனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாகவும், போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X