பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 1,163 மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
சேலம்: மாவட்டத்தில், 1,163 மையங்களில், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில், 2021க்கான வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடந்து வருகிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியில், கடந்த, 16ல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தின், 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி

சேலம்: மாவட்டத்தில், 1,163 மையங்களில், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.
இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில், 2021க்கான வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடந்து வருகிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியில், கடந்த, 16ல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தின், 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில், நவ., 21, 22, டிச., 12, 13ல், சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 1,163 இடங்களில், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும் முகாமில், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவைக்கு விண்ணப்பிக்கலாம். இதில், 2002 டிச., 31க்கு முன் பிறந்து, 18 வயது பூர்த்தியடைந்தவர், இச்சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி வாக்காளர் பெயர்களை சேர்க்க, தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே, '1950' எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தால், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், நேரில் வந்து படிவங்களை பெற்றுச்செல்வர். www.nvsp.in என்ற இணையதளம், Voter helpline எனும் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். டிச., 15 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஜன., 20ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X