பொது செய்தி

தமிழ்நாடு

"சம்பந்தம் இல்லாத பெரிய விவகாரங்களில் மூக்கை நுழைப்பதே தமிழக கட்சிகளுக்கு வேலையாக போய்விட்டது.."

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, மருத்துவக் கல்லுாரிகளுக்கு மட்டும், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, தனி நுழைவுத் தேர்வு நடத்துவது ஏற்புடையதல்ல. மாநில உரிமைகளை நசுக்கி மேற்கொள்ளப்படும், இதுபோன்ற முடிவுகள், வரலாற்று பிழையாகி விடும்.- அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்'சம்பந்தம் இல்லாத, பெரிய விவகாரங்களில் எல்லாம் மூக்கை நுழைப்பதே, தமிழக கட்சிகளுக்கு
பேச்சு_பேட்டி_அறிக்கை, தினகரன், அமமுக

சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, மருத்துவக் கல்லுாரிகளுக்கு மட்டும், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, தனி நுழைவுத் தேர்வு நடத்துவது ஏற்புடையதல்ல. மாநில உரிமைகளை நசுக்கி மேற்கொள்ளப்படும், இதுபோன்ற முடிவுகள், வரலாற்று பிழையாகி விடும்.
- அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்


'சம்பந்தம் இல்லாத, பெரிய விவகாரங்களில் எல்லாம் மூக்கை நுழைப்பதே, தமிழக கட்சிகளுக்கு வேலையாக போய் விட்டது. அதிலும், மருத்துவ கல்வி, நுழைவுத்தேர்வு, இட ஒதுக்கீடு என்றால், அல்வா சாப்பிடுவது போல, ஆளாளுக்கு விதவிதமான கருத்துகளை கூறுகின்றனர். அந்த பட்டியலில், இப்போது நீங்களும் இணைந்து விட்டீர்கள் போலிருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கைகொரோனா ஓயப் போவதே இல்லை. அதற்கு தடுப்பு மருந்தும் வரப் போவதில்லை. தெய்வங்கள் துணை மற்றும் மந்திர சக்தியால் தான், அதை ஒழிக்க முடியும். ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கமும், இறை மந்திரமும் தான் கொரோனாவை விரட்டும்.
- தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணன்


'நீங்கள் சொல்வது உண்மை போலத் தான் இருக்கிறது; தடுப்பு மருந்தில், உலக நாடுகள் தடுமாறுகின்றனவே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணன் பேச்சு


இந்தியாவிலேயே, மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கட்சி எது என்றால், அது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. ஆரவாரத்தால் கட்சி நடத்த முடியாது. சித்தாந்தம், கொள்கை அவசியம்.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்


'அடேங்கப்பா... எவ்வளவு பெரிய உண்மை. அப்போ, உங்கள் கூட்டணி கட்சியான, தி.மு.க., குடும்பத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேச்சுlatest tamil news


அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் தற்காலிக போராசிரியர்கள், பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கின்றனர். எனவே, புதிதாக பணி வழங்கும்போது, கல்லுாரி ஒப்பந்த மற்றும் தற்காலிக பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
- த.மா.கா., தலைவர் வாசன்


'இந்த விவகாரத்தை பிடித்து, நம் தலைவர்கள் அறிக்கை விட்டு, ஒரு ரவுண்டு வந்து விட்டனர்; நீங்கள் கொஞ்சம் தாமதம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை


தி.மு.க., அதன் தலைவர் ஸ்டாலினின் குடும்ப கட்சியாகி விட்டது. அழகிரி, கனிமொழிக்கு கூட அதில் இடமில்லை. ஸ்டாலினை விட அழகிரி அரசியல் சாமர்த்தியம் உள்ளவர். அவர் கட்சி துவங்கினால், பா.ஜ., வரவேற்கும்.
- பா.ஜ., மாநில பொது செயலர் ஸ்ரீநிவாசன்


'நீங்கள் சொல்லும் நபரின் சாமர்த்தியம் தான், தமிழகம் அறிந்ததாயிற்றே; சும்மா உசுப்பேற்றி விடாதீர்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில பொது செயலர் ஸ்ரீநிவாசன் பேட்டி


கேந்திரிய வித்யாலயாக்களில் தமிழ் கற்றுக் கொடுக்கும் விவகாரத்தில் கொடி பிடிக்கும், தி.மு.க., - எம்.பி.,க்கள், அங்கு இடம் கேட்டு, இனிமேல் பரிந்துரை கடிதம் அனுப்ப மாட்டார்களா?
- தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'அதையும் செய்வோம்; இதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம் என்கிறார்களோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
20-நவ-202017:46:24 IST Report Abuse
konanki தங்க கடத்திலில் போதை மருந்து வர்த்தகத்தில் ஈடுபடும் நவீன உண்டிகுலுக்கி சேட்டன்கள்
Rate this:
Cancel
Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
20-நவ-202016:29:36 IST Report Abuse
Dr.subbanarasu Divakaran இரண்டாது உலக போரில் முதலில் கம்யூனிஸ்ட் கள் ஹிட்லரையே ஆதரித்தார்கள். ஹிட்லர் ஸ்டாலின் கிரேட் நெருங்கியபோது கம்யூனிஸ்ட் கட்சி திசை திரும்பியது. நம் நாடு சுதந்திரத்துக்கு ஒரு எள்ளளவும் இவர்கள் udavidayidillai
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
20-நவ-202015:45:14 IST Report Abuse
S.Ganesan அரசியல்வாதிகள் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பது பார்க்கும் பொது வடிவேல் "எல்லோரும் பாத்துக்குங்க. ஜெயிலுக்கு போறேன். நானும் ரௌடிதான். நானும் ரௌடிதான்" என்று சொல்வாரே அந்த காமடி சீன்தான் நியாபகத்திற்கு வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X