பொது செய்தி

தமிழ்நாடு

'சர்ச்சை' இன்ஸ்பெக்டரிடம் கூடுதல் எஸ்.பி., விசாரணை

Added : நவ 20, 2020
Share
Advertisement
சேலம்: வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம். இவர், அதே பகுதியில் உள்ள, ஒரு ஓட்டலில், பிறந்தநாளை கொண்டாடினார். அதில், ஆள்கடத்தல் வழக்கில் சிக்கிய, மன்னாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கர், 45, பங்கேற்றார். இதுகுறித்து, கடந்த, 15ல், நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, இன்ஸ்பெக்டரின் பிறந்தநாள் குறித்த தகவலை, சங்கருக்கு தெரிவித்த ஏட்டுகள் முத்துகுமார், ரமேஷ்,

சேலம்: வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம். இவர், அதே பகுதியில் உள்ள, ஒரு ஓட்டலில், பிறந்தநாளை கொண்டாடினார். அதில், ஆள்கடத்தல் வழக்கில் சிக்கிய, மன்னாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கர், 45, பங்கேற்றார். இதுகுறித்து, கடந்த, 15ல், நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, இன்ஸ்பெக்டரின் பிறந்தநாள் குறித்த தகவலை, சங்கருக்கு தெரிவித்த ஏட்டுகள் முத்துகுமார், ரமேஷ், அருள்முருகன், அருள்குமார் ஆகியோரை, ஆயுதப்படைக்கு மாற்றி, எஸ்.பி., தீபாகானிகேர் உத்தரவிட்டார். இதையடுத்து, சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்பெக்டர் சுப்ரமணியத்திடம் விசாரிக்க, கூடுதல் எஸ்.பி., அன்புக்கு, சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார் உத்தரவிட்டார். அதன்படி, இன்ஸ்பெக்டர், போலீசாரிடம், கூடுதல் எஸ்.பி., விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X