பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று குருபெயர்ச்சி: சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பரிகார பூஜை

Added : நவ 20, 2020
Share
Advertisement
சேலம்: திருக்கணித பஞ்சாங்கப்படி, குரு பகவான், தனுசில் இருந்து, மகர ராசிக்கு இன்று பெயர்ச்சியாவதால், சக்தி விநாயகர் கோவிலில், சிறப்பு பரிகார பூஜை நடக்கிறது.குரு பகவான் ஸ்தலங்களில் முதன்மையான, ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவில் உள்பட, தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில், குருபெயர்ச்சி விழா, கடந்த, 15ல் வாக்கிய பஞ்சாங்கப்படி நடந்து முடிந்தது. திருக்கணித பஞ்சாங்கப்படி, குரு

சேலம்: திருக்கணித பஞ்சாங்கப்படி, குரு பகவான், தனுசில் இருந்து, மகர ராசிக்கு இன்று பெயர்ச்சியாவதால், சக்தி விநாயகர் கோவிலில், சிறப்பு பரிகார பூஜை நடக்கிறது.


குரு பகவான் ஸ்தலங்களில் முதன்மையான, ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவில் உள்பட, தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில், குருபெயர்ச்சி விழா, கடந்த, 15ல் வாக்கிய பஞ்சாங்கப்படி நடந்து முடிந்தது. திருக்கணித பஞ்சாங்கப்படி, குரு பகவான், இன்று மதியம், 1:40 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை முன்னிட்டு, சேலம், இரண்டாவது அக்ரஹாரம், ராஜரத்தினம் தெருவில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், பரிகார யாகம், சிறப்பு பூஜை செய்யப்பட உள்ளது. குரு பெயர்ச்சியால், ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீன ராசிக்காரருக்கு சிறப்பான பலன், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகர ராசிக்காரருக்கு, சுமாரான பலன் கிடைக்கும் என, திருக்கணித பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை பரிகார யாக பூஜை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X