பொது செய்தி

தமிழ்நாடு

வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு: வி.சி., கட்சியினர் 38 பேர் கைது

Added : நவ 20, 2020
Share
Advertisement
சேலம்: பா.ஜ., வேல் யாத்திரைக்கு எதிராக, கறுப்புக்கொடி காட்ட முயன்ற, வி.சி., கட்சியை சேர்ந்த, 38 பேரை, போலீசார் கைது செய்தனர். சேலம், குரங்குச்சாவடியில், பா.ஜ., மாநில தலைவர் முருகன் தலைமையில், வேல் யாத்திரை பொதுக்கூட்டம், நேற்று நடந்தது. அந்த கூட்டத்தை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, வி.சி., கட்சியினர் அனுமதி கோரினர். போலீசார், அனுமதி மறுத்துவிட்டனர்.

சேலம்: பா.ஜ., வேல் யாத்திரைக்கு எதிராக, கறுப்புக்கொடி காட்ட முயன்ற, வி.சி., கட்சியை சேர்ந்த, 38 பேரை, போலீசார் கைது செய்தனர். சேலம், குரங்குச்சாவடியில், பா.ஜ., மாநில தலைவர் முருகன் தலைமையில், வேல் யாத்திரை பொதுக்கூட்டம், நேற்று நடந்தது. அந்த கூட்டத்தை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, வி.சி., கட்சியினர் அனுமதி கோரினர். போலீசார், அனுமதி மறுத்துவிட்டனர். ஆனால், அதை மீறி, வேல் யாத்திரைக்கு கறுப்பு கொடி காட்ட, அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், மாநகரம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சீல்நாயக்கன்பட்டி பைபாஸில், வி.சி., கட்சி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணை செயலர் சிவா, ஆத்தூர் நகர செயலர் செல்வம், வாழப்பாடி ஒன்றிய செயலர் வேல்முருகன் தலைமையில், 38 பேர் கூட்டமாக சேர்ந்தனர். இதையறிந்து, தெற்கு சரக சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் போலீசார், 38 பேரையும் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X