சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு ஆயுள் சிறை

Added : நவ 20, 2020
Share
Advertisement
சேலம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு, ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த, ராமன் மகன் ராஜா, 21. இவர், 2018ல், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்தார். அதே ஆண்டு, ஏப்., 8ல், அப்பகுதியை சேர்ந்த, 5 வயது சிறுமிக்கு, சாக்லெட் தருவதாக கூறி, வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சேலம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு, ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த, ராமன் மகன் ராஜா, 21. இவர், 2018ல், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்தார். அதே ஆண்டு, ஏப்., 8ல், அப்பகுதியை சேர்ந்த, 5 வயது சிறுமிக்கு, சாக்லெட் தருவதாக கூறி, வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த, சிறுமியின் பெற்றோர், ஓமலூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வழக்குப்பதிந்த போலீசார், ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று, ராஜாவுக்கு ஆயுள் சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி முருகானந்தம் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X