புதர்மண்டிய அரூர் பெரிய ஏரி; சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

Added : நவ 20, 2020
Share
Advertisement
அரூர்: அரூர் பெரிய ஏரியில், புதர்மண்டியுள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அரூரில், 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி நிரம்புவதன் மூலம், அரூர் நகரில், குடிநீர் தட்டுப்பாடு நீங்குகிறது. மேலும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி

அரூர்: அரூர் பெரிய ஏரியில், புதர்மண்டியுள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


அரூரில், 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி நிரம்புவதன் மூலம், அரூர் நகரில், குடிநீர் தட்டுப்பாடு நீங்குகிறது. மேலும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கு, தேவையான நீர், வாணியாறு அணையிலிருந்து, வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி, தென்கரைகோட்டை உள்ளிட்ட ஏரிகள் வழியாக, கொளகம்பட்டியில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, காரை ஒட்டு தடுப்பணைக்கு வருகிறது. பின், அங்கிருந்து அரூர் பெரிய ஏரியில் சேர்கிறது. கடந்தாண்டு, அரூர் பெரிய ஏரியில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்களை, 'அழகு அரூர் காப்போம்' என்ற பெயரில், தன்னார்வலர்கள் அகற்றினர். தொடர்ந்து, காரை ஒட்டு தடுப்பணையில் இருந்து, அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும், கால்வாயை தூர்வாரினர். இந்நிலையில், அரூர் பெரிய ஏரியில் மீண்டும், முட்செடிகள் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. தற்போது, வாணியாறு அணையிலிருந்து, வெங்கடசமுத்திரம் ஏரிக்கு, உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அரூர் பெரிய ஏரிக்கும் நடப்பாண்டு, தண்ணீர் வரும் நிலையுள்ளது. எனவே, அரூர் பெரிய ஏரியில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X