பொது செய்தி

தமிழ்நாடு

காரிமங்கலத்தில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
தர்மபுரி: 'நவீன வாசக்டமி' எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம், காரிமங்கலத்தில் இன்று நடக்கிறது என, தர்மபுரி ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் (குடும்ப நலன்) ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், ஆண்களுக்கான சிறப்பு நவீன கருத்தடை சிகிச்சை முகாம், இன்று(20), காரிமங்கலம் அரசு மருத்துவ மனையில் உள்ள, சமுதாய

தர்மபுரி: 'நவீன வாசக்டமி' எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம், காரிமங்கலத்தில் இன்று நடக்கிறது என, தர்மபுரி ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் (குடும்ப நலன்) ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், ஆண்களுக்கான சிறப்பு நவீன கருத்தடை சிகிச்சை முகாம், இன்று(20), காரிமங்கலம் அரசு மருத்துவ மனையில் உள்ள, சமுதாய உடல்நல மையத்தில் நடக்கிறது. சீன தேசத்து, வாசக்டமி எனப்படும் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம், சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. இதில், வாசக்டமி செய்து கொள்ளும் நபருக்கு ஊக்கத்தொகையாக, 1,100 ரூபாய் வழங்கப்படும். விருப்பமுள்ள ஆண்கள், இம்முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். விபரங்களுக்கு, 98941 43410 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X