பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் 12 ஆயிரம் கன அடி நீர்வரத்து

Added : நவ 20, 2020
Share
Advertisement
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியாற்றில், கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக, மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து உபரி நீர், காவிரியாற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஒகேனக்கல்லை ஒட்டிய நீர்பிடிப்பு பகுதிகளிலும், மழை பெய்வதால்,

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியாற்றில், கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக, மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து உபரி நீர், காவிரியாற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஒகேனக்கல்லை ஒட்டிய நீர்பிடிப்பு பகுதிகளிலும், மழை பெய்வதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், கடந்த, 17ல் வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கும், அதே அளவு நீடித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X