பொது செய்தி

தமிழ்நாடு

யானையை அடக்கம் செய்வதில் அலட்சியம்: வனத்துறை மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஓசூர்: இறந்த யானையை அடக்கம் செய்வதில், வனத்துறையினர் அலட்சியம் காட்டியதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி அடுத்த சென்னமாளத்தில் கடந்த, 3ல், 10 வயது பெண் யானை ஒன்று துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக, விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டார். வனத்துறையினர் கால்நடை டாக்டர்கள் உதவியோடு யானையை உடற்கூறு ஆய்வு

ஓசூர்: இறந்த யானையை அடக்கம் செய்வதில், வனத்துறையினர் அலட்சியம் காட்டியதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி அடுத்த சென்னமாளத்தில் கடந்த, 3ல், 10 வயது பெண் யானை ஒன்று துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக, விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டார். வனத்துறையினர் கால்நடை டாக்டர்கள் உதவியோடு யானையை உடற்கூறு ஆய்வு செய்து, அதை அடக்கம் செய்யாமல் அப்படியே விட்டுச் சென்றனர். இதனால் யானையில் உடல் அழுகி, அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. கிராம மக்கள் புகாரின்படி, அந்த யானையின் உடலை முறையாக அடக்கம் செய்ய, மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவிட்டார். அதன்படி, வன ஊழியர்கள் நேற்று பொக்லைன் இயந்திரத்தில் பள்ளம் தோண்டி, இறந்த யானையின் உடலை அடக்கம் செய்தனர். மேலும், அப்பகுதியை சுற்றிலும் மருந்து தெளிக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'யானை இறந்து, 17 நாட்களுக்கு பிறகு, அடக்கம் செய்யப்பட்டுள்ளது. வனத்திலுள்ள யானைகளை பாதுகாப்பதிலும், அவை இறந்தால் அடக்கம் செய்வதிலும், வனத்துறையினர் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்,' என குற்றம் சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X