பொது செய்தி

தமிழ்நாடு

தந்தையை தவிக்க விட்ட மகன்களிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு

Added : நவ 20, 2020
Share
Advertisement
வேலூர்: தந்தையை தவிக்க விட்ட மகன்களிடமிருந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வேலூர், சப் - கலெக்டர் கணேஷ் மீட்டு கொடுத்தார்.வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னையை சேர்ந்தவர், ரேணுகோபால், 80; இவர் கடந்த, 10ல், வேலூர், சப்- கலெக்டர் கணேஷிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு தலா மூன்று மகன், மகள்கள் உள்ளனர். 2013ல் மூன்று மகன்கள் மீது, அனைத்து சொத்துக்களையும்

வேலூர்: தந்தையை தவிக்க விட்ட மகன்களிடமிருந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வேலூர், சப் - கலெக்டர் கணேஷ் மீட்டு கொடுத்தார்.


வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னையை சேர்ந்தவர், ரேணுகோபால், 80; இவர் கடந்த, 10ல், வேலூர், சப்- கலெக்டர் கணேஷிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு தலா மூன்று மகன், மகள்கள் உள்ளனர். 2013ல் மூன்று மகன்கள் மீது, அனைத்து சொத்துக்களையும் எழுதி கொடுத்து விட்டேன். ஆனால் அவர்கள், எனக்கு தங்க இடம் கொடுக்காமலும், உணவளிக்காமலும் துன்புறுத்தி வருகின்றனர். அதனால், நான் எழுதி கொடுத்த சொத்துக்களை மீட்டு, என் பெயரில் எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார். இந்த மனுவின் மீது நடத்திய விசாரணையில், ரேணுகோபாலுக்கு, அவரது மகன்கள் உணவளிக்காமல் துன்புறுத்தியது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து, பெற்றோர், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு சட்டத்தில், ரேணுகோபால் தானமாக எழுதிக்கொடுத்த, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் பத்திரத்தை ரத்து செய்தும், மீண்டும் ரேணுகோபால் பெயருக்கே எழுதி வைக்கவும், சப் -கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவின் நகல், ரேணுகோபாலிடம் நேற்று, சப் -கலெக்டர் கணேஷ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X