பொது செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த பெண் யானை; 15 மணி நேரம் போராடி மீட்பு

Added : நவ 20, 2020
Share
Advertisement
தர்மபுரி: பாலக்கோடு அருகே, கிணற்றில் தவறி விழுந்த பெண் யானையை, 15 மணி நேர போராட்டத்துக்கு பின், வனத்துறையினர் மீட்டனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி அடுத்த ஏலகுண்டூரை சேர்ந்தவர் வெங்கடாஜலம். இவர் நேற்று காலை, 5:00 மணியளவில் தன் விவசாய நிலத்துக்கு சென்றபோது, அங்குள்ள, 55 அடி ஆழ கிணற்றிலிருந்து யானையின் பிளிறல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, யானை

தர்மபுரி: பாலக்கோடு அருகே, கிணற்றில் தவறி விழுந்த பெண் யானையை, 15 மணி நேர போராட்டத்துக்கு பின், வனத்துறையினர் மீட்டனர்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி அடுத்த ஏலகுண்டூரை சேர்ந்தவர் வெங்கடாஜலம். இவர் நேற்று காலை, 5:00 மணியளவில் தன் விவசாய நிலத்துக்கு சென்றபோது, அங்குள்ள, 55 அடி ஆழ கிணற்றிலிருந்து யானையின் பிளிறல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, யானை ஒன்று கிணற்றில் விழுந்து, தத்தளித்து கொண்டு இருந்தது. இதையறிந்த, பாலக்கோடு வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது, கிணற்றில், 22 வயது மதிக்கத்தக்க பெண் யானை, கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டனர். காலை, 7:00 மணிக்கு, கால்நடை மருத்துவர் உதவியுடன், யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, தீயணைப்புத்துறையினர் உதவியுடன், யானையை மீட்கும் பணி துவங்கியது. கிணற்றில், மூன்றடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தால், அதை வெளியேற்ற, கிணற்றில் இறக்கிய குழாயை யானை சேதப்படுத்தியது. மாலை, 6:35 மணி வரை யானை முழு மயக்கம் அடையாததால், யானையை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இரவு, 7:30 மணிக்கு, யானை மயக்கம் அடைந்ததையடுத்து, அதன் கால்களில் பெல்ட் கட்டி, கிரேன் மூலம், யானையை கிணற்றில் இருந்து மீட்கும் போது, 45 அடி உயரத்துக்கு தூக்கிய நிலையில், பெல்ட் கழன்று, கிணற்றின் உள்ளே பக்கவாட்டில் யானை விழுந்தது. யானைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, மீண்டும் யானைக்கு பெல்ட் கட்டி, இரவு, 8:25 மணிக்கு உயிருடன் மீட்டனர். பின்னர், யானைக்கு மயக்கம் தெளியவைக்க, தண்ணீர் பீச்சியடித்தனர். சிறிது நேரத்தில் யானை எழுந்து நின்றது. யானை அருகிலுள்ள, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டில் விடப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X