பொது செய்தி

தமிழ்நாடு

'மருத்துவ ஒதுக்கீட்டில் குளறுபடி இல்லை'

Added : நவ 20, 2020
Share
Advertisement
கோபிசெட்டிபாளையம்: ''அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியருக்கு, மருத்துவ கல்வியில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர் கூறியதாவது: மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் துவங்கி உள்ளது. 18 ஆயிரத்து, 200 மாணவ, மாணவியர் கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். முறையாக கவுன்சிலிங் நடந்து வருகிறது. அதில், அரசு

கோபிசெட்டிபாளையம்: ''அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியருக்கு, மருத்துவ கல்வியில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர் கூறியதாவது: மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் துவங்கி உள்ளது. 18 ஆயிரத்து, 200 மாணவ, மாணவியர் கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். முறையாக கவுன்சிலிங் நடந்து வருகிறது. அதில், அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியருக்கு மருத்துவ படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில், எவ்வித குளறுபடியும் இல்லை. இதை ஏற்கனவே, சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால், இன்று ஏழை, எளிய மாணவர்கள் டாக்டராகும் கனவு நிறைவேறி உள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X