பொது செய்தி

தமிழ்நாடு

1,666 புது பாடப்பிரிவு தொடக்கம்: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஓமலூர்: ''தமிழகத்தில், 1,666 புது பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசினார்.சேலம் மாவட்டம், நங்கவள்ளி, வனவாசியில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று நடந்தது. அதில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில், மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பு எட்டாக்கனியாக இருந்தது. தொலைதூரத்தில் சென்று படிக்க

ஓமலூர்: ''தமிழகத்தில், 1,666 புது பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசினார்.


சேலம் மாவட்டம், நங்கவள்ளி, வனவாசியில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று நடந்தது. அதில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில், மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பு எட்டாக்கனியாக இருந்தது. தொலைதூரத்தில் சென்று படிக்க வேண்டியிருந்தது. மத்திய அரசின், புது கல்வி கொள்கையில், 2035ல், 50 சதவீதம்(கிராஸ் என்ரோல்மென்ட் ரேஸியோ) இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால், முதல்வர் நடவடிக்கையால், கடந்த ஆண்டு, 49 சதவீதத்தை எட்டி, நாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அனைவருக்கும் கல்வி கிடைக்க, பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை, அறிவியல் என, 85 கல்லூரிகளை, முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். புதிதாக, அரசு மருத்துவ கல்லூரி - 11 தொடங்கப்பட்டுள்ளன. 1,666 புது பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் தான், கடந்த ஆண்டு, 49 சதவீதம், 'கிராஸ் என்ரோல்மென்ட் ரேஸியோ' அதிகரித்துள்ளது. இரு ஆண்டில், புதிதாக, 6 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. நீர் மேலாண்மை திட்டத்திலும், முதலிடத்தில் உள்ளது. அதன்மூலம், கூடுதலாக பயிர் உற்பத்தி செய்ய முடிகிறது. பயிர் கடனுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய், முதல்வர் உயர்த்தி வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X