பொது செய்தி

தமிழ்நாடு

பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: மனைவியுடன் முதல்வர் தரிசனம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஓமலூர்: பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில், முதல்வர் பழனிசாமி, மனைவியுடன் தரிசனம் செய்தார். சேலம் மாவட்டம், நங்கவள்ளி, பெரியசோரகை, சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று, முதல்வர் பழனிசாமி முன்னிலையில் நடந்தது. முன்னதாக, காலை, 9:00 மணிக்கு, கோவிலுக்கு வந்த முதல்வரை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வரவேற்றனர்.

ஓமலூர்: பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில், முதல்வர் பழனிசாமி, மனைவியுடன் தரிசனம் செய்தார். சேலம் மாவட்டம், நங்கவள்ளி, பெரியசோரகை, சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று, முதல்வர் பழனிசாமி முன்னிலையில் நடந்தது. முன்னதாக, காலை, 9:00 மணிக்கு, கோவிலுக்கு வந்த முதல்வரை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வரவேற்றனர். விழாவில், தன் மனைவி ராதாவுடன், முதல்வர் பழனிசாமி, யாகசாலை பூஜையில் பங்கேற்றார். அருகில், அமைச்சர்கள் ராமச்சந்திரன், அன்பழகன், ஓமலூர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் அமர்ந்திருந்தனர். 30 நிமிட பூஜைக்கு பின், மூலஸ்தன கோபுர விமானத்துக்கு, முதல்வர் பழனிசாமி, அமைச்சர் அன்பழகன் சென்ற பின், 9:35 மணிக்கு கலசத்துக்கு புனித நீரூற்றப்பட்டு, கும்பாபி ஷேகம் நடந்தது. முதல்வர், அதிகாரிகள் புறப்பட்ட பின், மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, கிராம மக்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்று, முதல்வரை வரவேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X