தமிழ்நாடு

'எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர முயற்சி செய்யுங்கள்': ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி 'அட்வைஸ்'

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஓமலூர்: ''மக்களுக்கு ஆக்கப்பூர்வ கருத்துகளை சொல்லி, அதன் மூலம், எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர முயற்சி செய்யுங்கள்,'' என, முதல்வர் பழனிசாமி தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, 'அட்வைஸ்' செய்து பேசினார்.சேலம் மாவட்டம் வனவாசியில், நேற்று அரசு விழா நடந்தது. 291.94 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டப்பணிகளை, முதல்வர் துவக்கி வைத்து பேசியதாவது: டில்லி, கேரளா உள்ளிட்ட பிற

ஓமலூர்: ''மக்களுக்கு ஆக்கப்பூர்வ கருத்துகளை சொல்லி, அதன் மூலம், எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர முயற்சி செய்யுங்கள்,'' என, முதல்வர் பழனிசாமி தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, 'அட்வைஸ்' செய்து பேசினார்.


சேலம் மாவட்டம் வனவாசியில், நேற்று அரசு விழா நடந்தது. 291.94 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டப்பணிகளை, முதல்வர் துவக்கி வைத்து பேசியதாவது: டில்லி, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், அரசு சரியான முறையில், நடவடிக்கை எடுத்ததால், கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக குறைந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு, தினமும் என்னைப்பற்றி நினைத்தால் தான் தூக்கமே வரும். இந்த ஆட்சி ஒரு மாதம், ஆறு மாதம், ஓராண்டு தாங்காது என்றனர். தற்போது, மூன்று ஆண்டு முடிந்து, நான்காம் ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகள் தொடங்குவது, சுகாதாரத்துறை, கல்வி என, எல்லாவற்றிலும் முதலிடத்தில் தமிழகம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஏதோ பழனிசாமி, கிராமத்திலிருந்து வந்துள்ளார். அவரால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தார். ஆனால், அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து, விருது பெற்றுக்கொண்டிருக்கிறோம். வேண்டுமென்றே திட்டமிட்டு, அறையில் இருந்து கொண்டே, தினமும் ஏதாவது ஒரு அறிக்கை விடுகிறார். நாட்டு மக்களுக்கு உழைக்கக்கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க., ஒரே அரசு அ.தி.மு.க., அரசு. தினமும் அறிக்கை விட்டு, அறிக்கை நாயகனாக, ஸ்டாலின் திகழலாமே தவிர, நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய எந்த காலத்திலும், உங்கள் கட்சியும் வராது. தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்? வேண்டுமென்றே, அரசின் மீது பழி சுமத்துவது, அமைச்சர்கள் மீது பொய், அவதூறு செய்திகளை, வெளியிடுவதை தான், ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார்.இதையெல்லாம் நிறுத்திவிட்டு, மக்களுக்கு ஆக்கப்பூர்வ கருத்துகளை சொல்லுங்கள். அதன்மூலம், எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர முயற்சி செய்யுங்கள். தமிழகத்தில், மக்களுக்கு நல்லது செய்கின்ற ஒரே ஆட்சி அ.தி.மு.க., என்பதை, நாங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X