பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலை மஹா தீபத்துக்கு 3,500 கிலோ நெய் கொள்முதல்

Added : நவ 20, 2020
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், மஹா தீபம் ஏற்ற, ஆவினிலிருந்து, 3,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை, அருணாச லேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா இன்று, 20ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் வரும், 29ல், 2,668 அடி உயர மலை உச்சியில் ஆறடி உயர கொப்பரையில், 1,000 மீட்டர் காடா துணியால் தயாரிக்கப்பட்ட திரி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், மஹா தீபம் ஏற்ற, ஆவினிலிருந்து, 3,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை, அருணாச லேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா இன்று, 20ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் வரும், 29ல், 2,668 அடி உயர மலை உச்சியில் ஆறடி உயர கொப்பரையில், 1,000 மீட்டர் காடா துணியால் தயாரிக்கப்பட்ட திரி கொண்டு, மஹா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, 11 நாட்கள் எரியும் இந்த தீபத்தை, 40 கி.மீ., தூரம் வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். மஹா தீபத்துக்காக ஆவினிலிருந்து, 3,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு, நேற்று கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும், ராஜகோபுரம் அருகேயுள்ள திட்டிவாயிலில், சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டு, பக்தர்களிடம் நேரடி நெய் காணிக்கை பெறப்பட்டு வருகிறது. நெய் காணிக்கைக்கு பணமாகவும் பெறப்படுகிறது. ஆன்லைனிலும் பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X