பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொரோனா 2வது அலை வந்தாலும் ஆபத்தில்லை: சொல்கிறது 'செரோ சர்வே' ஆய்வு

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
மதுரை: மதுரை நகரில் மட்டும் 7.14 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என 'செரோ சர்வே' முடிவு தெரிவித்துள்ளது. எனவே 2வது அலை மதுரையை தாக்காது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரேண்டமாக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை சோதித்து கொரோனாவின் தாக்கத்தை தீர்மானிப்பது தான் 'செரோ சர்வே'யின் சாராம்சம். அதாவது, சர்வேக்கு உட்படுத்தப்படுபவரின்
Madurai, மதுரை, கொரோனா, அலை, ஆபத்தில்லை,  செரோ சர்வே, ஆய்வு

மதுரை: மதுரை நகரில் மட்டும் 7.14 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என 'செரோ சர்வே' முடிவு தெரிவித்துள்ளது. எனவே 2வது அலை மதுரையை தாக்காது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரேண்டமாக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை சோதித்து கொரோனாவின் தாக்கத்தை தீர்மானிப்பது தான் 'செரோ சர்வே'யின் சாராம்சம். அதாவது, சர்வேக்கு உட்படுத்தப்படுபவரின் ரத்த மாதிரியை சேகரித்து, அதில் ஐ.ஜி.ஜி., என்னும் ஆன்டிபாடி (நோய் எதிர்ப்பு சக்தி) உருவாகி இருக்கிறதா என சோதிப்பர். ஒருவேளை உருவாகி இருந்தால் அவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்ற முடிவிற்கு வருவர். சர்வேக்கு பின்னர் கிடைக்கும் முடிவை மொத்த மக்கள் தொகையுடன் பொருத்தி பார்த்து எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கணக்கிடுவர். இதன் மூலம் 2வது அலைக்கான வாய்ப்பை கணிக்கலாம்.


42 சதவீதம் பேர் பாதிப்பு


மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி எல்லைக்குள் 18, புறநகரில் 20 என 30 பகுதிகளில் சர்வே நடந்தது.பகுதிக்கு 30 குடும்பத்தை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஒருவர் என 1140 பேரின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன. மாநகராட்சியில் மட்டும் 600 பேரி ரத்த மாதிரி சோதிக்கப்பட்டது. ரகசியம் காக்கப்படும் சர்வே முடிவு 'தினமலர்' நாளிதழுக்கு கிடைத்துள்ளது. அதில் மாநகராட்சியில் 42 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது: சர்வே மூலம் நகரில் மட்டும் 42 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்துள்ளது.2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி நகரின் மக்கள் தொகை 14.62 லட்சமாகும். இப்போது இந்த எண்ணிக்கை 17 லட்சமாக இருக்கும் என கணக்கிட்டுள்ளோம். அப்படிபார்த்தால் நகரில் மட்டும் 7,14,000 பேரை கொரோனா தாக்கி இருக்கக் கூடும். தற்போது இவர்கள் அனைவரிடமும் வைரஸை எதிர்த்துப்போரிடும் ஆன்டிபாடி உற்பத்தியாகி உள்ளது. எனவே இனி பெரிய அளவில் வைரஸால் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. 2வது அலை வந்தாலும் மதுரை மாநகராட்சிக்கு பாதிப்பு இருக்காது என நம்புகிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக பாதிப்பு இருக்கலாம்' என்றார்.


latest tamil news



இது வைரஸ் விநோதம்

தற்போது மதுரை மாநகராட்சி எல்லைக்குள் 2000 முதல் 2500 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தினமும் 15 முதல் 20 பேர் பாதிக்கப்படுகின்றனர். நகரில் மட்டும் 13,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர் மக்கள் தொகையில் இது 0.79 சதவீதம் தான். இவர்களுக்கு மட்டும் தான் தாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோம் என்பது தெரியும். செரோ சர்வே முடிவு படி பார்த்தால் நகரில் 41.21 சதவீதம் பேருக்கு (அதாவது 7,00,540 பேர்) கொரோனா தாக்கியது தெரியாமலேயே அதில் இருந்து மீண்டுவிட்டனர். சிலர் இறந்திருக்கலாம்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202021:07:08 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ \\நான் முன்பு எழுதிய கருத்து\\ 130கோடி பேருக்கும் ஒரே நாளில் சோதனை செய்தால் 30முதல்40கோடி பேர்வரை கண்டிப்பாக கொரோனா தொற்று இருக்கும், அவரவர் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப ஒவ்வருவரும் ஒவ்வோரு பாதிப்பு அளவில் இருப்பர், சிலர் பாதிக்கப்படாமல் பரப்புவர்களாக மட்டும் இருப்பர், எதிர்ப்புசக்தி அதிகம் உள்ள பரப்புபவர் பலர் தனக்கு கொரோனா வந்துபோனதுகூட தெரியால் இருப்பர், எனவே தடுப்பு மருந்துதான் தீர்வு, அதுவரை விதிப்படி நடக்கும், நாட்டை முடக்குவதெல்லாம் இனிவரும் நாட்களில் வேலைக்காகாது, ட்ரம் கூறிய இதே வார்த்தையை ஜேபிடனும் தற்போது கூறியுள்ளார், நாட்டையும் பொருளாதாரத்தையும் முடக்க முடியாது என்று,
Rate this:
Cancel
tamilan - chennai,இந்தியா
20-நவ-202013:42:15 IST Report Abuse
tamilan இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் ஆக்கிட்டாய்ங்கெ.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
20-நவ-202011:01:25 IST Report Abuse
Tamilan இரண்டாம் அலை ஏற்கனவே இந்தியாவில் வந்து சென்றுவிட்டது . ஒட்டுமொத்த ஊரடங்கால் முதல அலை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்று இருக்கலாம் . மூன்றாம் அலையை வராமல் தடுக்கவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X