பொது செய்தி

தமிழ்நாடு

நாமகிரிப்பேட்டை சுகாதார நிலையத்தில் மனநலம் குறித்து விழிப்புணர்வு

Added : நவ 20, 2020
Share
Advertisement
நாமக்கல்: மாவட்ட மனநல திட்டம் சார்பில், நாமகிரிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொதுமக்களுக்கு மனநலம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ அலுவலர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மனநல ஆலோசகர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட, அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் முகிலரசி பேசியதாவது: பயம், பதற்றம் என்பது எல்லாவித நோய்களிலும், ஒரு

நாமக்கல்: மாவட்ட மனநல திட்டம் சார்பில், நாமகிரிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொதுமக்களுக்கு மனநலம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ அலுவலர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மனநல ஆலோசகர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட, அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் முகிலரசி பேசியதாவது: பயம், பதற்றம் என்பது எல்லாவித நோய்களிலும், ஒரு அறிகுறியாக தோன்றினாலும் சில சமயம், அதுவே ஒரு தனி நோயாக மனிதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது. நெற்றியில் வியர்வை, லேசான தலைவலி, கண்களில் எரிச்சல், கண்களில் வீக்கம், மூக்கில் சுவாசத்தில் மாற்றம், மூக்கு விடைப்பு, உதடுகள் காய்ந்து போகும், நாக்கு உலர்ந்து போகும், தொண்டையில் ஏதோ அடைத்தது போலிருக்கும். கழுத்திலும் தோளிலும் தசைகள் இறுகும். கைகளில் லேசான நடுக்கம் ஏற்படும். உள்ளங்கையில் வியர்க்கும். எதிர்பார்ப்பும், எதிர்பார்ப்புக்கு ஏற்ற, தயார் நிலையில் இல்லாத போதும்தான் பதற்றம் உருவாகிறது. இதற்கான சிகிச்சை முறைகள் யாவுமே இறுக்கத்தை தளர்த்தவும், மனதை வலுப்படுத்தவும் முனைகின்றன. தியானம், யோகப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் இறுக்கம் தளரவும், மனதில் அமைதி நிலவவும் உதவும். மன அழுத்தத்தையும், டென்ஷனையும் குறைக்க மூச்சு பயிற்சி அவசியம். முதலில் சுவாசித்தல் என்பது மூக்கின் வழியாக நடைபெற வேண்டும். வாய் வழியாக சுவாசிக்க கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X