பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் வார விழா

Added : நவ 20, 2020
Share
Advertisement
நாமக்கல்: நவ., மூன்றாம் வாரம் தேசிய பச்சிளங் குழந்தைகள் வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், பச்சிளங் குழந்தைகள் வாரவிழா, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சாந்தா அருள்மொழி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சித்ரா ஆகியோர் பங்கேற்று, பயனாளிகளுக்கு அம்மா

நாமக்கல்: நவ., மூன்றாம் வாரம் தேசிய பச்சிளங் குழந்தைகள் வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், பச்சிளங் குழந்தைகள் வாரவிழா, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சாந்தா அருள்மொழி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சித்ரா ஆகியோர் பங்கேற்று, பயனாளிகளுக்கு அம்மா சிறப்பு குழந்தைகள் நலப் பெட்டகங்களை வழங்கினர். கல்லூரி டீன் சாந்தா அருள்மொழி பேசியதாவது: குழந்தை பிறந்த முதல், 28 நாள்கள் முக்கியமான காலக்கட்டமாகும். குழந்தை பெற்ற பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தேசிய பச்சிளங் குழந்தைகள் வார விழா நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் நாள்தோறும் முகாம் நடத்தப்பட்டு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி, பிரசவித்த பெண்களின் நலம் பாதுகாக்கப்படுகிறது. பச்சிளங் குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி அளித்தல், செவிலியர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு, குழந்தைகள் கருவிலேயே நல்ல ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்தல், குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு, சுகாதார அறிவுரைகள் போன்றவை இந்த வார விழா நாள்களில் தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X